பொறாமை, பகை, கோபம் ஆசை என்பன மனத்தால் ஏற்படும் அழுக்குகள். இவற்றைத் தியானம் என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். பொய் சொல்வது, அடுத்தவனைப் பற்றிப் புறம் சொல்லித் திரிவது, கோள் சொல்வது, தீமையான சொற்களைப் பேசுவது, தெய்வத்தைப் பழிப்பது, ஞானிகளைப் பழிப்பது, நல்ல பெண்களைப் பழிப்பது ஆகியவை வாயால் ஏற்படும் அழுக்குகள். இறைவனைப் பற்றிய மந்திரங்கள், தோத்திரப் பாடல்கள் பாடி இந்த அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும். கொலை, களவு, பிறர் மனைவியோடு தகாத உறவு முதலியவை உடம்பால் ஏற்படும் அழுக்குகள். அவற்றை அர்ச்சனை என்ற நீரால் கழுவிக் கொள்ள வேண்டும். மருவூர் மகானின் அவதார மலர். ஊருக்கு உபதேசம் செய்வதற்கு முன்பாக உன் உள்ளத்திற்கு உபதேசம் செய்து கொள்- அன்னையின் அருள்வாக்கு.

]]>