ய்மையும், புறத்தூய்மையும் மிக்கவர்களாகப் பணி செய்ய வேண்டும். யாகசாலையில் நுழைகிறபோது நீராடிவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

அன்னையின் முன் வைத்துப் படைக்கப்பட்ட ஓர் எலுமிச்சம்பழத்தை பாதுகாப்பாக மடியில் வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். வேள்விப் பணியில் ஈடுபடும் தொண்டர்கள் செவ்வாடை அணிந்து கொண்டுதான் பணி செய்ய வேண்டும். வேள்வித் தொண்டா்கள் தங்கள் கழுத்தில் அன்னையின் டாலரை அணிந்திருக்க வேண்டும். யாகசாலையில் வேள்விப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது அரசியல், சினிமா, காமம், கேளிக்கை, அரட்டைப் பேச்சுக்கள் போன்றவை அறவே கூடாது. முடிந்தவரை மெளனமாகவே பணி செய்ய வேண்டும். வேள்வியை வியாபாரமாக்காதே! அவ்வாறு ஆக்கினால் அது விஷமாக மாறிவிடும் என்பது அன்னையின் எச்சரிக்கை. நம் சித்தர்பீடத்தில் அன்னை ஆதிபராசக்திஅருளிய விதி முறைப்படியே அவற்றைப் பின்பற்றி நியமம் தவறாமல் வேள்வி செய்ய வேண்டும். வேள்விப் பணியில் ஈடுபடுவதற்கு முன்பு, அம்மா, நான் அறிந்தோ அறியாமலோ செய்யும் பிழைகளை பொறுத்து அருள்செய். எந்தப் பிழையும் வராதபடி என் உள்ளிருந்து எனக்கு வழிகாட்டு- என்று அன்னையிடம் மானசீகமாக வேண்டிக்கொண்டு பணி செய்தால் சக்கரங்கள், யாக குண்டங்கள் அமைப்பது ஆகிய பணிகள் தவறில்லாமல் நடக்க ஏதுவாகும். வேள்விப்பூசை என்பது கத்தி முனை மேல் நடப்பது போன்றது. வேள்விப் பணி, கருவறைப்பணி இந்த இரண்டு இடங்களிலும் பய பக்தியுடன் நடக்க வேண்டும். சா்வ ஜாக்கிரதை தேவை. ஒரு மின்சார நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கு எவ்வளவு எச்சரிக்கை உணர்வு தேவையோ, அந்த அளவு எச்சரிக்கை உணர்வு தேவை. அவ்வப்போது மாறுகிற கிரக நிலைக்குத் தக்கபடி வழிபாட்டு முறைகளிலும், வேள்விப்பூசை முறைகளிலும் அன்னை மாற்றங்களைக் கூறுவதுண்டு. எனவே வேள்விக் குழு தொண்டா்கள் வேள்வி சம்பந்தமான எல்லா நியமங்களையும், நெறிமுறைகளையும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பல ஆண்டுகள் நெருப்பில் நின்றும், நீரில் நின்றும், இலை, சருகு, காய், கனி தின்றும் தவம் செய்யும் யோகிகட்குக் கிடைக்கிற தவ பலம் இந்த வேள்விப் பணியில் ஈடுபடுகிற தொண்டர்களுக்கு கிடைக்கும். இதனைப் புரிந்து கொண்டு உண்மை உணர்வோடும், கட்டுப்பாடோடும், பொறுப்புணர்வோடும் பணி புரிந்தால் இந்த அவதாரக் காலத்தில் அன்னையின் அருள் பூரணமாகக் கிடைக்கும். அந்த அருள் அவர்தம் சந்ததியினர்க்கும் கிடைக்கும். பிறர் வீடுகளில் குடும்பநல வேள்வி செய்யச் செல்கிற தொண்டர்கள், அந்த வீட்டாரிடம் எளிமையாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் போக்குவரத்து செலவு மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் தொண்டு. அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்க நினைத்தால் அது வியாபாரம். எனவே புரிந்து நடந்து கொள்ள வேண்டும். நன்றி -(அன்னை ஆதிபராசக்தி அருளிய வேள்வி முறைகள், பக்-414-415)
]]>