நிரந்திர வேலைக்காக அம்மாவிடம் அவர் பெற்றோர் அருள்வாக்கு கேட்டனர். அன்று ஞாயிற்று கிழமை இங்கிலாந்தில் ஒரு மேலாதிகாரி போன் செய்து வேலை தருவதாக உறுதி கூறினார். இங்கிலாந்தில் ஞாயிறு அனைவரும் ஓய்வுக்கு போய் விடுவர். அவர் ஞாயிறு அன்று போன் செய்ததே ஒரு அற்புதம்.அன்று தான் அம்மாவிடம் அருள்வாக்கு கேட்ட நாள். 2002 Jan. பார்த்த வேலையை இழக்கும் நிலை. அந்த மேல் அதிகாரியை போய் பார்த்த பொழுது “சாரி! தேவைப்படும் நபர்களை எடுத்தது விட்டோம்.உங்களுக்கு உதவ இயலாது என்கிறார். பாரிஸ் மன்றம் ப்ரியா இளங்கோவை தொடர்பு கொண்டபோது, அவர் “நீங்கள் இருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் அம்மாவுக்கு செலுத்துங்கள்! பிரச்சனை தீரும் என்கிறார். அவ்வாறே இருமுடி செலுத்தியபின், மேலே குறிப்பிட்ட அதிகாரி மீண்டும் அழைத்து வேலையில் சேர வேண்டியவர் ஒருவர் வந்து சேரவில்லை, அந்த வேலையை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களா என்றார்? உடனே ஒப்பு கொண்டார். Ref Sakthi Oli Feb.2011 (வேலை பிரச்சனை உள்ளவர்கள் அம்மாவை வேண்டிக்கொண்டு 5 நாள் விரதம் இருந்துஇருமுடி ஏந்தி மேல்மருவத்தூர் அம்மாவுக்கு செலுத்துங்கள்)

]]>