?துன்பங்கள் ஏன் ?*
“விளையாட்டுக் குழந்தைக்குச் சோறூட்ட முயன்றால், தொடக்கத்தில் அது உண்ண மறுக்கிறது. பாட்டுப் பாடி, சிரிக்க வைத்து, விளையாட விட்டு, அதற்கும் ஒரு சோர்வு ஏற்படுகிற நேரத்தில் ஊட்டினால், உணவை ஏற்றுக் கொள்கிறது.
*அது போல, இன்பம், சந்தோஷம் என்றெல்லாம் வருகிற போது, சில உண்மைகள் புரிவதில்லை; துன்பம், கஷ்டம் என்ற அனுபவங்கள் கிடைக்கிற போது தான், சில உண்மைகளை உணர்கிற பக்குவமே கிடைக்கிறது.*
*
?துன்பம் ஏற்பட, ஏற்படத்தான், ஆன்மா பக்குவப்படுகிறது.* துன்பமும் ஓர் உண்மைகளை உணர்கிற பக்குவமே கிடைக்கிறது.
*
?துன்பம் ஏற்பட, ஏற்படத்தான், ஆன்மா பக்குவப்படுகிறது. துன்பமும் ஓர் அனுபவமே ! அந்த அனுபவத்தையும் ஒவ்வொருவனும் பெற வேண்டும்.”*
துன்பமும் ஓர் அனுபவம்:
*”துன்பத்தின் மூலம் தான் சிறந்த அனுபவம் கிடைக்கும்; அதை அனுபவித்தே பெற வேண்டும்.*
என்னை நெருங்கவேண்டும் என்று துடிப்பவர்கள், இவ்வுலகத் துன்பங்களையும், ஊழ்வினைகளையும் என் முன்னாலேயே அனுபவித்துக் கழித்து விட வேண்டும்.”
விதியின் விளையாட்டு ;
“*மகனே!* *இந்த வினாடியிலேயே, உன் குறைகளைப் போக்கி விடுவேன் .ஆனால் எந்த ஒரு பிரார்த்துவ* *வினையினால், இந்தக் குறை உனக்கு வந்ததோ, அந்த வினை சும்மா இராது. இந்தக் குறையைப் போக்கினால், வேறு விதமாக அது உடனே உன்னைத் தாக்கும்.*
இப்பொழுது உள்ள வயிற்று வலியை நீக்கினால், நாளை அது தலை வலியாக வரும். அதை நீக்கினால், முதுகு வலியாக வரும். அந்த வினை தீருகிற வரையில், ஏதாவது ஒரு வகையில் அதன் தாக்கம், உன்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கும் .எனவே, கவலைப் படாமல் இரு!
வினை தீருகின்ற காலத்தை, நான் அறிவேன். அது தீருகின்ற காலம் வரும் வரை, உன்னை ஒன்றும் செய்யாமல், நான் பார்த்துக் கொள்கிறேன். உரிய காலம் வரும் போது, குறையைப் போக்குகிறேன். உரிய காலம் வரும் போது, குறையப் போக்குகிறேன்.”
ஏன் உடனே குறை தீர்க்கவில்லை ?
“மகனே ! தாயிடம் இவ்வளவு தூரம் மன்றாடி முறையிட்டேனே; அவள் என்னிடம் கருணை கொண்டு, என் குறைகளை நீக்க முற்படவில்லையே என்று கலங்குகிறாய் ! நான் யார் தெரியுமா ? உலகம் அனைத்தையும் ஈன்ற தாய் அல்லவா ?
குழந்தை அழத் தொடங்குவதற்கு முன் , பால் கொடுப்பவள், தாய் அல்லள். ஏன் தெரியுமா….?
குழந்தை கால் கைகளை உதைத்துக் கொண்டு, அழ வேண்டும் – கண்களிலிருந்து கண்ணீர் வெளிப் பட வேண்டும். கண்ணீர் வெளிப்படும் போது தான், கண்கள் தூய்மை அடைகின்றன.
கால் கைகளைக் குழந்தை உதைத்துக் கொள்ளும் போது தான், அவை வலுப்பெறுகின்றன. அவ்வாறு இல்லையெனில், குழந்தையின் கால், கைகள் சூம்பிப் போய் விடும். ஆகவே தான், குழந்தையை ஓரளவு அழ விட்ட பிறகு, தாய் பால் கொடுக்கிறாள்.
நீங்களும் உங்கள் பிழைகளை நினைத்து , வருந்திக் கண்ணீர் விட்டால், உங்கள் மனம் தூய்மை அடையும். அதன் பின்னரே நான் அருள் செய்வேன்.”
இனிப்பும் தேவை; கசப்பும் தேவை:
வாழ்க்கையில் இனிப்பும் தேவை; கசப்பும் தேவை.இனிப் பே கொடுத்தால் என்ன ஆகும் ? மேலேயும் போகும் (வாந்தி) ;கீழேயும் போகும் (பேதி ) .எனவே , கசப்பும் தேவை.”
அவளது அருளில் குறையில்லை ! எனினும், சிலருக்குச் சந்தேகம் வருகிறது. அத்தகைய சந்தேகங்களை, மேற்கண்ட அன்னையின் அருள் வாக்குகள் தெளிவு படுத்தும் !
1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் – 297 + 298]]>