ஆனால் ஆன்மிக நெறியில் இருப்பவர்கள் முதலில் அந்தக் குழந்தையை அனைத்துத் தேற்றி, அதன் அழுகையை நிறுத்துவார்கள். பிறகு அதனை அதன் பெற்றோர்களிடம் சேர்ப்பார்கள். இதில் இரு வகைப் புண்ணியம் சேரும். இதுதான் சாதாரண மனிதர்க்கும், ஆன்மிக நெறியில் உள்ளவர்கட்க்கும் உள்ள வேறுபாடு. என்று கூறும் போதே அந்த அம்மையார் கண்ணிலிருந்து கண்ணீர், ஏன் தெரியுமா? முதல் நாள் தேம்மி அழுதுகொண்டிருந்த குழந்தையை தேற்றி, அலைந்து, திரிந்து, அதன் பெற்றோரிடம் அந்த குழந்தையை சேர்த்தாராம். எங்கிருந்துகொண்டும் நாம் செய்கிற தொண்டு அம்மாவுக்கு தெரிகிறதே என பரவசபட்டு வந்த கண்ணீர் அது!. நன்றி சக்தி ஒளி ஐனவரி 87. ” மனிதன் மகாத்மாவானால் மகத்துவம்தான், மனிதன் புனிதனானால் புண்ணியம் தான், ஆனால் முதலில் மனிதன் மனிதனாக வாழ வேண்டும், பிறறை மனிதனாக வாழப் பழக்க வேண்டும். ” -அன்னையின் அருள்வாக்கு.

]]>