மா பஞ்சபூத வழிபாடு எப்படி செய்வது என்று வேள்விக்குழு தொண்டர்களுக்கு செய்து காட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது.

வழிபாடு செய்யும் முறை: வடக்கு (OR) கிழக்கு நோக்கி தலைமேல் கைகூப்பி நின்று கொண்டு “ஓம் ஓம்சக்தியே!நிலம்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய அனைத்து பஞ்சதெய்வங்களும் அருள்புரிய வேண்டும் ஓம்சக்தியே”என்று கூற வேண்டும். பிறகு,இரு கைகளின் பெரு விரலையும்,ஆட்காட்டி விரலையும் முக்கோணம் போல இணைத்து,இதன் வழியாக,எரிந்துகொண்டிருக்கும் தீபச் சுடரை,ஒரு கண்ணை மூடிக்கொண்டு,ஒரு கண்ணால் பார்த்து”ஓம் ஓம்சக்தியே அருஉருவான தெய்வங்கள் அனைத்தும் அருள்புரிய வேண்டும் ஓம்சக்தியே” என்று கூறவும்.பிறகு,மண்டியிட்டு தலையும்,இரு உள்ளங்கைகளும் பூமியில் படுமாறு வைத்து “ஓம் ஓம்சக்தியே!பூமாதேவியே எங்களை காத்து அருள் புரிய வேண்டும் ஓம்சக்தியே” என்று கூறவும்.பிறகு மண்டியிட்ட நிலையிலேயே நிமிர்ந்து,இரு உள்ளங்கைகளையும் நெஞ்சின் இரு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு”ஓம் ஓம்சக்தியே இதயம் பரிசுத்தமாக இருக்கவேண்டும் ஓம்சக்தியே” என்று கூறவும்.பிறகு இடது உள்ளங்கையை இடது மார்பிலேயே வைத்துக்கொண்டு,வலது கையை மட்டும் எடுத்து,பின்வரும் இடங்களில் தொட்டு,பின்வருமாறு கூற வேண்டும்.. இரு கண்களை தொட்டு”ஓம் ஓம்சக்தியே நல்லதையே பார்க்க வேண்டும் ஓம்சக்தியே” இரு காதுகளை தொட்டு “ஓம் ஓம்சக்தியே நல்லதையே கேட்க வேண்டும் ஓம்சக்தியே”பிறகு தலையில் கைவைத்து “ஓம் ஓம்சக்தியே நினைவு நல்லதாக இருக்க வேண்டும் ஓம்சக்தியே”பிறகு மூக்கில் கைவைத்து “ஓம் ஓம்சக்தியே நல்லதையே சுவாசிக்க வேண்டும் ஓம்சக்தியே”பிறகு உதட்டில் கைவைத்து “ஓம் ஓம்சக்தியே நல்லதையே பேச வேண்டும் ஓம்சக்தியே” பிறகு நாக்கில் தொட்டு”ஓம் ஓம்சக்தியே நல்லதையே ருசிக்க வேண்டும் ஓம்சக்தியே” என்று கூறவும். பிறகு மண்டியிட்ட நிலையிலிருந்து எழுந்து,தலை மேல் கைகூப்பிக்கொண்டு பின்வருமாறு கூறவும்.”ஓம் ஓம்சக்தியே என்னுள் இருக்கும் ஆன்மாவை வணங்குகிறேன் ஓம்சக்தியே”.இவ்வாறு கூறிக்கொண்டே உங்களை ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.
ஓம் அடியவர் வழிபாடுகந்தாய் போற்றி ஓம்.
 அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.
ஓம்சக்தி.
]]>