க்கிறியோ – அந்த நானே வந்துருக்கேன் இல்லே….? தலையைச் சுற்றி ஏன் மூக்கைத் தொடணும்? நீ தொண்டு செய்! சுலபமான வழியை நான் சொல்கிறேன். கஷ்டப்பட்டு ஓடியாரணும்னு என நீ ஏன் நினைக்கிறே….?* என்றார்கள். தன் பரத்துவத்தையும் அம்மா சொல்லிக் காட்டினார்கள்.

தொண்டு மார்க்கம் பற்றி நாம் அறிந்து கொண்டது சிலவே. அறியாதது பல. தொண்டு செய்யச் செய்ய நமது மனம் விசாலமாக வேண்டும். சுயநல உணர்வு பொதுநல உணர்வாக மாற வேண்டும். மனிதாபிமானம் வளர வேண்டும். நம்மிடம் பொறாமை, பொச்சரிப்பு உணர்வு ஓங்கி இருக்கிறது. நமது தொண்டு சுயநலத்துக்காகச் செய்யப்படுகிறது. ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது. நமது தொண்டுக்குக் கிடைப்பது பச்சையாகச் சொன்னால் கூலி! தொண்டின் மூலம் நமது அகங்காரம் கரைய வேண்டும்! கரைந்து விட்டதா? ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது. ஒரு தொண்டர் பிரச்சனைகளைத் தாங்க முடியாமல் அம்மாவிடம் போனார். *தொண்டு குறைஞ்சு போச்சு! தொல்லைகள் பெருகிப் போச்சு! அங்கங்க போயிக் கோள் சொல்றதை முதலில் நிறுத்து!* என்று சொல்லிவிட்டு விருட்டென எழுந்து உள்ளே போய்விட்டார்கள். இதெல்லாம் நம் செவ்வாடைத் தொண்டர்களுக்குப் பாடம். இன்றைய நிலையில் பல இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்? அம்மாவுக்குத் தொண்டு செய்தால் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு போகலாம். கைநிறைய சம்பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். சம்பாதனையே வாழ்க்கைக் குறிக்கோளாகப் போய்விட்ட காலமாக உள்ளது. அதற்கு மேலும் வாழ்க்கை உள்ளது என்பதை அனுபவம்தான் கற்றுக் கொடுக்கிறது. தொண்டு செய்ய வைத்து அவரவர்க்கும் அம்மா பலன் கொடுக்கத்தான் செய்கிறாள். அவள் அதன்மூலம் ருசி காட்டுகிறாள். அவள் எதிர்பார்ப்பு என்ன…? உன் உள்ளம் விரிய வேண்டும். உள்ளத்து அழுக்கு போக வேண்டும். ஆன்ம குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உன் கர்மவினைகளைத் தொண்டு செய்து கரைத்துக் கொள்ளவேண்டும். நீங்கள் எல்லோரும் இந்த ஒரு தாயின் பிள்ளைகள்தானே…! அப்படி இருக்க போட்டி பொறாமைகள் ஏன்? என்று கேட்கிறாள். தொண்டு நெறியின் நோக்கம், அதன் தத்துவம், அதன் மகத்துவம் தெரியாமலேயே நாமெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அம்மா எதிர்பார்ப்பது வேறு! நாம் புரிந்து நடந்து கொள்வது வேறு! சக்திஒளி மார்ச் 2012
]]>