சித்தாபுதூர்மன்றத்துக்கு ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் வருவதற்கு இருந்தார்கள் குளிச்சியான மணல் பரப்பிய பந்தலில் மக்கள் கூட்டம்.
அதற்கு சற்று முன்னதாக ஆட்டோவில் ஒரு பெண்மணியின் உடலை தூக்கி கொண்டு வந்து அம் மன்றத்திற்கு அருகில் படுக்க வைத்தனர். மருத்துவர்களால் கைவிடப்பட்டு இனி இவர் பிழை மாட்டார் என ஒதுக்கப்பட்ட அந்த உடம்பைக் கட்டிலில் கிடத்தியிருந்தனர். பங்காரு அம்மாவின் பார்வை பட்டு உயிர் பிழைக்க மாட்டாளா… என்ற ஒரு சபலம் !அதனால் உற்றார் உறவினர் அந்தப் பெண்மணியை மன்றத்துக்கே கொண்டு வந்து விட்டார்கள். மன்றத்தில் அன்னை ஆதிபராசக்தியிடம் மனமருகி வேண்டினர். இவள் எப்படியாவது பிழைத்து எழுந்தால் இறுதி வரை மன்றத்துக்குத் தொண்டு செய்வதாக வேண்டி கொண்டனர்.
ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் அந்த மன்றத்திற்க்கு வருவதற்கு 11.00மணி ஆகிவிட்டது. அதோ… பங்காரு அம்மா கார் வருகிறது… ஓம் சக்தி ! பராசக்தி ! அம்மா தாயே ! அருள் புரிவாயே ! என்ற பக்தர்களின் முழக்கங்கள் எழுந்தன.
பங்காருஅம்மா அவர்கள் மன்றத்திற்கு வந்து தீபாராதனை செய்து விட்டு, வரிசையாக வந்த பக்தர்களுக்குப் பிரசாதங்கள் கொடுத்தபடி இருந்தார்கள்.
அப்போது… அங்கே மருத்துவர்களால் கைவிடப்பட்டு மரணத்தின் வாசலில் கிடந்த அந்தப் பெண்மணி மெல்ல எழுந்து அமர்ந்தார். யார் துணையும் இல்லாமல் மெல்லமெல்ல நடந்து வந்தார்கள். மற்ற பெண்களோடு வந்து அம்மாவிடம் கை நீட்டினார். பிரசாதம் பெற்றார். நெற்றியில் இட்டுக் கொண்டு எஞ்சியதை வாயில் போட்டுக் கொண்டு மெல்ல கட்டிலை நோக்கி சென்றார்.
ஆம் !
அவள் பிழைத்துக் கொண்டாள் ! உற்றார் உறவினர் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்.
27.3.1983 அன்று ஞாயிறு கோவையில் மிகப் பெரிய ஆன்மிக ஊர்வலம்.
இராம் நகர் மேல்நிலைப் பள்ளியின்அருகிலிருந்து மாலை 5.00 மணிக்கு புறப்பட்ட அந்த ஊர்வலம், மாலை 7.00 மணியளவில் வ.உ.சி பூங்காவை அடைந்தது.
கோவை மாவட்ட தொண்டர்களிடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள் விடைபெற்றப் புறப்பட்டார்கள்.
கோவை மாவட்டத்தில் ஆறுநாள் பயணத்தில் சும்மா இலட்சத்து இருபதாயிரம் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கியதும, மேலும் பல லட்ச்ச மக்களுக்கு ஆங்காங்கே எழுந்தருளி ஆசி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
(கோவை மாவட்டத்தில் ஆச்சரியப்பீட நாயகர் ஆன்மிககுரு அருள்திரு , பங்காருஅடிகளார் அவர்களின் ஆன்மீக பயணத்தின் போது நடந்த அற்புங்கள்)
பக்கம்: 409- 410.
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-2.