எங்கள் குடும்பம் படாத தொல்லை இல்லை வராத கஷ்டமும் இல்லை வசதி இல்லாத குடும்பம். அம்மா எங்கள் குடும்பத்திற்கு ஒரு வழி அமைத்துக் கொடு.என்று வேண்டிக் கொள்வேன்.
ஒரு நாள் பரம்பொருள்பங்காருஅம்மா அம்மா அவர்களை நினைத்து அம்மா என்னை போன்ற ஏழை மக்கள் எப்படி அம்மா உன் காலடியை தொடுவது? உன் ஆசி பெறுவது எப்படி அம்மா? என்று நினைத்து கலங்கினேன்.
நாளை நவம்பர் முதல் நாள் அது என் பிறந்தநாள் உன் பாதம் பற்றி ஆசிபெற வேண்டும் உன் ஆசி கிடைக்க வேண்டும் நீ என்னை உன் மகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கவலையில் இருந்து என்னை மீட்க வேண்டும் என வேண்டிக் கொண்டு படுத்து உறங்கி விட்டேன்.
அன்று இரவு அம்மா என் கனவில் தோன்றி ஆசி வழங்குகிறாள்.
பரம்பொருள்அம்மா அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் அப்படி ஒரு காட்சி அளித்து பாதபூஜை செய்ய வைத்தால் இந்த கனவு என் மனதிற்கு அருமருந்தாக அமைந்தது.
பரம்பொருள்பங்காருஅம்மா அம்மா நீ எங்கோ மருவத்தூரில் இருக்கிறாய் நான் இந்த ஊரில் கவலையில் வாடுகிறேன் எங்கள் குடும்பமும் கோர்ட் வழக்கு இவற்றில் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறது.
அப்பாவும் அண்ணனும் குடிகாரர்கள் தம்பியோ உடல்நிலை பாதிக்கப் பட்டவன் நானும் ஒருவரை நேசித்து அவரையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்.
இவ்வளவு பிரச்சினைகளையும் தாங்க முடியாமல் தவிக்கிறேன் எனக்கு இப்போது ஒரு வழி சொல்லு நீ எப்படி எந்த ரூபத்தில் வருவாயோ.
எனக்கு நல்ல வழி சொல் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் உச்சந்தலையில் பல்லி சகுனம் குரல் எழுப்பியது.
உச்சந்தலையில் பல்லி சகுனம் அடித்தால் அச்சம் இல்லை என்பார்கள். நீ அச்சமில்லாமல் இரு என்று பரம்பொருள்பங்காருஅம்மா அவர்கள் சொல்வதாக எடுத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தேன்.
ஒரு நாள் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை நினைத்து என் குடும்பத்திற்கு ஒரு வருமானத்தை தந்து என் குடும்பத்தை காப்பாற்றும் மா என நினைத்து வேண்டிக்கொண்டேன்.
அன்று இரவு பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் என் கனவில் தோன்றி மகளே உன் குடும்பத்தாரையெல்லாம் என்னிடம் அழைத்துக்கொண்டு வா என்று சொல்லி மறைந்து விட்டாள்.
அவ்வாறேகுடும்பத்துடன் மருவத்தூர் சென்று பாதபூஜை செய்து விட்டு திரும்பினோம்.
ஒரு வாரத்திற்குள் எங்கள் வீடு தேடி இருவர் வந்தனர் உங்கள் நிலத்தில் ஏர்டெல் டவர் அமைக்க கம்பம் நிறுவ வந்துள்ளோம் .நீங்கள் அனுமதித்தால் மாத வாடகையாகரூ 2500 தருகிறோம் என்றார்கள்.
பரம்பொருள்பங்காருஅம்மா அவர்களை அனுப்பி வைத்ததாக கருதி ஒப்புக் கொண்டோம் எங்கள் சாப்பாட்டுக்கு வழி வகுத்து கொடுத்தாள்.
நான் குடியிருந்த ஊரிலேயே என் சொந்தக்கார இளைஞர் ஒருவரை நேசித்தேன் .அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினேன் அவர் சிவில் இன்ஜினியரிங் படித்தவர். நான் பிபிஏ முடித்துவிட்டு வீட்டில் இருப்பவள் .அவர்கள் வசதி பெற்றவர்கள். நாங்கள் பரம ஏழை. இதை காரணமாக வைத்து எங்கள் திருமணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
உடனே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் வந்து பாதபூஜை செய்தேன். என்னை பார்த்து எல்லாவற்றையும் நான் நன்றாக நடத்தித்தருகிறேன் என்றாள். எல்லாவற்றையும் என்றால்—?
நம் மனதில் இருப்பது அம்மாவுக்கு எப்படி தெரிகிறது என்று நான் ஆச்சர்யப்பட்டேன். அம்மாவுக்கு இருப்பது இரண்டு கண்கள் அல்ல. ஆயிரம் கண்கள் என்று அன்றுதான் நான் உணர்ந்தேன்.
அம்மா அருளால் கற்பனைக்கு எட்டாத படி என் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. எங்கள் வயல் விற்காமல் இருந்தது அம்மாவின் அருளால் 5 லட்சத்துக்கு விற்றது.அதிசயத் தக்க முறையில் எங்கள் வீடு தேடி பணம் வந்தது. புதிய வீடு ஒன்று கட்டினோம் பழைய விவசாய கடன் அரசாங்கத்தால் தள்ளுபடியாகின. அனைத்தும் அன்னை ஆதிபராசக்தியின் அருளே.
பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை. ஏழைகள் வாழ முடியாது என்று நினைக்காதீர்கள் அம்மா அருள் என்ற ஒன்று இருந்தால் போதும். எந்த வழியிலாவது இறங்கி வந்து அம்மா நம்மை கை கொடுத்து காப்பாற்றுவாள்.
அம்மாவை சரண் அடைந்து விட்ட பிறகு எவ்வளவு வேதனை சோதனைகள் வந்தாலும் பரம்பொருள்பங்காருஅம்மா அவர்களை மறந்து விடக்கூடாது.
சக்தி .எம் . ராஜலட்சுமி.
பிரம்மதேசம் பெரம்பலூர் மாவட்டம்.