1990இல் பத்தாம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றேன்.
அறிவியல் அறிவும் பொறியியல் அறிவும் இல்லாத சராசரி கிராமத்து பையனாக நான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன்.
வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் என்அறிவிற்குஅப்பாற்பட்டதாக இருந்தன . கடுமையாக இருந்தன. பாடங்களை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறினேன்.
மெக்கானிக்கல் பிரிவில் சேர்ந்த நான் Mettal என்ற வார்த்தைக்கு கூட அர்த்தம் தெரியாமல் இருந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சக மாணவர்களின் கேலியும் கிண்டலும் என்னை மிகவும் வருத்தின. நான் என்ன செய்வேன் எந்த பின்புலமும் இல்லாமல் படிக்க வந்துவிட்டேன்.
அப்போது எனக்கு ஆதிபராசக்தியை பற்றியோ குருநாதர் பற்றியோ எதுவும் தெரியாது.
கோயிலுக்குப் போய் என் குறைகளை கொட்டி அழ வேண்டும் போலிருந்தது.
அம்மா கருவறை முன்பு நின்று கொண்டு அம்மா கிராமத்து பையன் நான் .எனக்கு இங்கு நடத்தும் பாடங்கள் புரியவில்லை .என்னை நம்பித் தான் என் குடும்பம் இருக்கிறது. நான் நன்றாக படித்து குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று என் அம்மாவும் அப்பாவும் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். படிப்பு ஏற மாட்டேன் என்கிறது .படிப்பை நிறுத்தவும் பயமாக இருக்கிறது. படிக்கவும் ஆசை என்னால் முடியவில்லையே ஏன் எனக்கு இந்த நிலை என மனசுக்குள் அம்மாவிடம் கேட்டு அழுதேன்.
அப்போது எங்கிருந்தோ யாரோ சொல்வது போல இருந்தது.
ஒவ்வொரு நாளும் உன் வகுப்பில் பாடம் தொடங்குவதற்கு முன் மூலமந்திரம் சொல்லு. உள்ளுணர்வோடு சொல்லு .மனத்தை ஒருநிலைப்படுத்தி வணங்கிவிட்டு மூலம் மந்திரம் சொல்லு என்று கேட்டது.
இதுதான் என் ஆன்மீக வளர்ச்சியின் முதற் படி.
அம்மா சொல்லியபடி ஏனோ தானோ என்று அலட்சியப்படுத்தாமல் அறிவு ஆராய்ச்சி செய்யாமல் மன ஒருமையுடன் அம்மாவை வணங்கி மூல மந்திரம் சொல்லி வகுப்பில் பாடங்களை கவனிக்க தொடங்கினேன்.
அந்த வாரத்தில் ஒரு ஆச்சரியம் நடந்தது
ஒரு நாள் வகுப்பில் சக மாணவர்கள் ஒரு பாடத்தில் ஒரு கணக்குக்கான விடை தெரியாமல் பல வகையில் விடை காண முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில் ஒரு புதிய முறையில் கணக்குப் போட்டு விடை காணும் வழி என் சிந்தனையில் உதித்தது. உடனே எழுந்து நான் விளக்கினேன்.
என் ஆசிரியரும் சக மானவர்களும் என்னை ஆச்சரித்தோடு பார்த்தார்கள் பாராட்டினார்கள்.
அம்மாவின் மூல மந்திரம் என் மூளையைப் பட்டைதீட்டியது.
அந்த வருடம் நடந்த தேர்வில் 180 மாணவர்களில் முதல் நான்கு இடத்தில் நான் தேர்ச்சி பெற்றேன்.
நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகிற மாணவர்களும் .வெளியுலக அறிவுமிக்க மாணவர்களும். பாடங்களை சரளமாக விளக்கும் மாணவர்களும். பிற மாணவர்களும் என்னை ஆச்சரியத்தோடு பார்க்க தொடங்கினர்.
வாலிபப் பருவத்தில் வழி மாறுவதற்கு இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனாலும் ஆன்மிக ஒளி வீசும் மருவத்தூரில் வழிமாறவழியில்லை கட்டுப்பாடு ஒழுக்கம் இவற்றுக்கு இங்கே முக்கியத்துவம்.
இந்த சூழலில் படிப்பு. வாரந்தோறும் ஆலயவழிபாடு .சித்தர் பீடத்துவிழா நாட்களில் தொண்டு என்று என்னை முறைபடித்திக் கொண்டு நடந்தேன்.
அம்மா அருளும் என் முயற்சியும் இருந்ததால் மூன்றாவது செமஸ்டரில் இரண்டாவது இடமும் .நான்காவது செமஸ்டரில் முதலிடமும். 5 .6 .ஆவது செமஸ்டரில் தொடர்ந்து முதலிடம் பெற முடிந்தது.
அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் நல்ல முன்னேற்றம் பெற முடிந்தது.
அதேசமயம் அம்மாவின் அருள் பார்வை (குரு தரிசனம்) அதிகம் கிடைக்க வாய்ப்பு இருந்ததால் ஆன்மீக நாட்டமும் வேரூன்றி வளர்ந்தது.ஆனால் அப்போது அது எனக்கு தெரியவில்லை இப்போது தெரிகிறது.
ஆதிபராசக்தியான பரம்பொருளின் அவதார காலத்தில் அவளது மண்ணில் கல்வி கற்பது எவ்வளவு பெரிய பேறு. எவ்வளவு புண்ணியம்.
படிப்பை முடித்தேன் அம்மா அருளால் ஒரு நல்ல நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது அந்த வேலை எனக்கு கிடைக்காமல் இருக்க ஆயிரம் காரணங்கள் உண்டு. ஆனாலும் அந்த வேலை எனக்கு கிடைத்தது. அம்மாவின் அருள்.
மருவத்தூரில் பெற்ற கல்வியால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆன்மீக சூழலில்வளர்ந்ததால் நல்ல பாதையில் என்னை இட்டுச் சென்றது.
ஓம் சக்தி!