சென்னையச் சேர்ந்த தொழிலதிபர் சக்தி திரு. சி. எச். கிருஷ்ணமூர்த்தி ராவ். ஒரு விழாவில் தம்மை பற்றிக் குறிப்பிட்டார். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஐம்பது ஆயிரம் ரூபாய்க் கையில் வைத்துக்கொண்டு என்ன தொழில் செய்து பிழைப்பது என்று புரியாமல் அன்னையிடம் அன்று வந்தேன். இன்று ஐந்துநூறு கோடி அளவிற்கு தொழில் நிறுவங்களை நடத்தும் அளவிற்கு அம்மா என்னை உயர்த்தினாள். எல்லாம் அம்மா ” போட்ட பிச்சை” என்று நன்றியுணர்வோடு குறிப்பிட்டார்.
அவர் ஆரம்ப நாள் அது !
ஏதேனும் இரசாயன பொருளை உற்பத்தி செய்யலாமா? என விரும்பி அன்னையின் அருள் வேண்டி வந்தார். அருள்வாக்கு கேட்க சென்றார். அன்னையை வணங்கி விட்டு அமர்ந்தும் அவரிடம் அன்னை வேப்பிலை ஒன்றை வழங்கினாள். பார்த்து கொண்டு இருந்தபோத அது கற்பூரமாக மாறியது. அது வெள்ளை நிறமுள்ள வாசம் நிறைந்த கற்பூரக் கட்டி. அவர் அதுகண்டு வியப்போடு இருந்தபோது அன்னை கூறினாள்.
“மகனே ! நீ இரசாயனத் தொழில் செய் அனுமதி கேட்டுச் செல்லக் குறிப்பு எழுதிக்கொண்டு வந்துள்ளாய். அதனால் நீ கேட்கும் முன்பே உனக்கு என் அருளையும், ஒரு இரசாயனப் பொருளையும் கொடுக்கிறேன். இந்த கற்பூரமும் இரசாயன பொருள் தானே…?
மக்களுக்குப் பயனுள்ளவாறும், ஏழைகளுக்கு நியாயமான விலையில் கிடைக்குமாறும், தரத்தில் உயரந்தாகவும், நூதன விஞ்ஞான முறையில் முதன்முறையாக இந்தியாவில் இரசாயன பொருளை உண்டாக்கவும். வழி செய்து தருகிறேன்” என்க்கூறி அருளினாள் அன்னை ஆதிபராசக்தி.