எங்கள் சிறுமுகை நகரில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவருளால்.”காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது.அந்தப் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று உண்டு. அந்த வேன் கடந்த மூன்று மாதமாக அடிக்கடி பழுதடைந்து கொண்டு வந்தது.

ஆகவே, அருகில் உள்ள புஞ்சை புளியம்பட்டி அன்னை ஆதிபராசக்தியின்
சக்தி பீடத்திற்கு வண்டியை எடுத்துச் சென்று பூசை செய்து எடுத்து வந்த பிறகு அடிக்கடி பழுதடைவது நின்று விட்டது. ஒழுங்காக வண்டி ஓடிற்று, குழந்தைகளை உரிய நேரத்தில் பள்ளிக்குச் சுமந்து சென்று பள்ளிக்கு அழைத்துச் சென்று மீள்கிறது.

காந்தி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அருகில் காட்டு இலாகாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் குடியிக்கிறார். புஞ்சை புளியம்பட்டி சக்தி பீடத்திற்கு வண்டியை எடுத்துச் செல்கிற போதெல்லாம் அந்த அதிகாரியையும், அவர் மனைவியயும், அன்னை ஆதிபராசக்தி வழிபட்டு வரலாம். நீங்களும் துனைக்கு வாருங்கள்” என்று அழைப்பர் பள்ளி நிர்வாகி சக்தி சாம்ராஜ்யம்.

அந்த அம்மாவோ வருவதற்கு மறுப்பு தெரிவிப்பார்கள். ஒரு முறை ஒரு வாரமாக அந்த அம்மையார்க்கு உடல் நலம் குன்றியது. அவர் கணவரோ மனைவியின் உடல் நலம் சரியாக வேண்டுமென்று ஓர் அறையில் தனியாக இருந்து கொண்டு விரதம் மேற்கொண்டிருந்தார்.
30.11.1988 அன்று அந்த அம்மாவுக்கு வயிற்று வலி அதிகமாயிற்று. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். பரிசோதனை செய்த டாக்டர்கள். ” இவர் உடம்பில் இரத்தம் கட்டி கட்டியாக ஆகி விட்டது. உடனே ஆபரேஷன் செய்து விட வேண்டும்” என்று சொல்லி விட்டார்கள்.

அந்த அம்மாவுக்கு பெரிய கவலை புகுந்து கொண்டது புஞ்சை புளியம்பட்டி சக்தி பீடத்திற்கு வருமாறு மூன்று முறை அழைத்தாளே, நாம் மறுப்பு தெரிவித்து விட்டோமே அதனால் தான் நமக்கு இந்தச் சோதனையோ? ஒரு தொண்டர் மூலமாக அம்மாவே அழைப்பு விடுத்தும் நாம் போக மறுத்து விட்டோமே என்றெல்லாம் எண்ணியெண்ணி அழுது கொண்டிருந்தார்.

பள்ளி நிர்வாகி சக்தி சாம்ராஜ் அவர்களிடம் சென்று, அழுதபடி” என் நோய் குணமாக வேண்டுமென்று அன்னை ஆதிபராசக்தியை நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். நான் அன்னை ஆதிபராசக்தியை வழிபட வராமல் போனது தவறு தான். எனக்கு ஆபரேஷன் செய்யாமல் குணமடைந்தால் ,அன்னை ஆதிபராசக்திக்கு நான் காணிக்கை செலுத்தி என் பிரார்த்தனையை நிறைவேற்றி விடுகிறேன். நீங்களும் எனக்காக அன்னை ஆதிபராசக்தியை
அவர்களை வேண்டிக் கொள்ளுங்கள்” என்றார்.

அம்மா! அம்மா ! என்ற கதறல்…..

மறுநாள் இரவு அந்த அம்மையார் தனியாகப் படுத்திருந்த பொழுது, திடீரென அம்மா! அம்மா! என்ற கதற ஆரம்பித்து விட்டார்கள். அந்தக் கதறல் ஒலி கேட்டு அக்கம்
பக்கத்திலிருந்தவர்களெல்லாம் ஒடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டு,” என்ன நடந்தது? என்ன ஆயிற்று என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.

செவ்வாடை அணிந்த பெண்மணி எங்கே ?

அந்த அம்மையார் செவ்வாடை அணிந்த ஒரு பெண்மணி ஒருவர் இங்கே இருந்தார்களே, அவர் எங்கே? என்று அழுதபடியே கேட்டார். சுற்றி நின்ற பெண்கள் சுற்றும் முற்றும் பார்த்து அப்படியாரும் இல்லாதது கண்டு விழித்தார்கள்.

சற்று நேரம் கழித்து சுயநினைவு வந்த பிறகு அவர் சொல்லத் தொடங்கினார்.

இன்றிரவு செவ்வாடை அணிந்த பெண்மணி ஒருவர் இங்கே வந்தார்கள். என் வயிற்றுப் பகுதியை மூன்று முறை தேய்த்து விட்டார்கள்.

பிறகு திடீரென என் வயிற்றின் தொப்புள் வழியாக ஒரு சிறிய பாம்பு வெளியே வந்த ஊர்ந்து சென்றது.

அதைப் பார்த்து விட்டுத்தான் நான் அலறினேன். செவ்வாடைப் பெண்மணி யார் என்று தெரியவில்லையே என்று கேலிக் கேவி அழுதார்.

வந்துபோன அந்தச் செவ்வாடை மாயக்காரி யார் என்பதை நம் மன்றத்தைச் சேர்ந்த சக்திகள் புரிந்து கொண்டார்கள். மற்ற பெண்மணிகள் புரிந்து கொள்ளவில்லை. ஏதோ கனவு கண்டு பயந்து போய் விட்டாள் என்றே எண்ணிக் கொண்டார்கள்.

டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வயிற்றிலிருந்த இரத்த கட்டிகள் கரைந்து விடுகின்றன. டாக்டர்களுக்கே இது குறித்து ஆச்சரியமாக இருந்தது. எப்படி இது சாத்தியம்? என்று குழம்பிப் போனார்கள்.

உங்களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ! நீங்கள் வீட்டுக்குப் போகலாம் என்று டாக்டர்கள் அனுப்பி விட்டார்கள்.

அதன் பிறகு அன்னை ஆதிபராசக்தியின் கருணையால் தான் இத்தகைய அற்புதம் நடந்திருக்கிறது என்று அந்த அம்மா புரிந்து கொண்டார்கள்.

ஒன்றேகால் ரூபாய் காணிக்கை செலுத்தி விடுகிறேன் என்று வேண்டிக் கொண்ட அந்தப் பிரார்த்தனைக்கும் செவி சாய்த்தாள் அன்னை ஆதிபராசக்தி. அதன் பொருட்டு ஒரு செவிலியாகச் சென்று குணப்படுத்தினாள் அன்னை ஆதிபராசக்தி.

சக்திகளே! அன்னை ஆதிபராசக்தியை நம்புங்கள்!

அன்னை ஆதிபராசக்தியை பரம்பொருள் பங்காரு அம்மாவாக வந்திருப்பதை
நம்புங்கள்!

அவள் செய்யும் சித்தாடல்களைப் பரிசீலனை செய்யாமல் அவள் பாதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

தன்னை நம்பியவர்களைக் கண்டிப்பாகக் கைவிட மாட்டாள் அந்த உலக நாயகி!

ஓம் சக்தி ! அம்மாவே சரணம் அம்மா!
திருவடி சரணம்! குருவடி சரணம்!
ஓம் சக்தி