ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது நல்லது.

0
955

“நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஐந்து பேர்களுக்காவது இருமுடி அணிவித்து அந்தச் செலவினங்களை நீங்கள் ஏற்று அவர்களையும் இங்கே அழைத்து வர வேண்டும்.
ஆன்மீக நெறியில் ஈடுபடாதவர்களையும் ஆன்மீகத்தில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கும் நிம்மதி கிடைக்கும்; உங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்;
“ஐந்து பேருக்கு இருமுடி போட்டு கூட்டி வருவதனால் அந்த ஐந்து பேருடைய ஆன்மாவும் குளிர்கிறது. அப்படிக் குளிரும் போது அந்தப்பலன் உங்களுக்கும் கிடைக்கும்.”
ஏழைச் சிறுவர் 5 பேர்; சிறுமியர் 5 பேராக இருமுடி போட்டு அழைத்து வந்தால் பலன் உண்டு.
எத்தனை ஏழைகளுக்கு இருமுடி அணிய வைத்து அழைத்துக் கொண்டு வருகிறாயோ அவ்வளவுக்கவ்வளவு உனக்குப் பலன் உண்டு.”
“மனித இனத்தை இறைவசமாக்க வேண்டியே இலவச இருமுடி போட்டு அழைத்து வரச்சொல்கிறேன். உங்கள் இனத்தை இறைவசமாக்க அன்னதானம் செய்யச் சொல்கிறேன். இருமுடியும், அன்னதானமும் உங்களை எல்லாம் இறைவசமாக்க உதவும் வழிகள்.”
“ஏழை எளிய மக்களுக்கு சக்தி மாலை அணிவித்து அழைத்து வருவது இந்த நாட்டிற்கும் நல்லது உன் வீட்டிற்கும் நல்லது.”
“சிலை வடிவில் கொலை வடிவம் உண்டு. காற்றிலும் கலப்படம் உண்டு. நூறு பேர்க்கு இருமுடி போட்டு அழைத்து வந்து ஆன்மீகத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஒருவனே நூறு பேரை அழிக்கும் நிலை ஏற்படும்.”
அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.