பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் ஆடிப்பூர திருவிழாவில் நிகழ்த்திய சித்தாடல்!

0
1307

ஆடிப்பூர பால் அபிடேகம்
13.08.18 அன்று காலை பரம்பொருள் பங்காருஅம்மாஅவர்கள் கருவறை அன்னை ஆதிபராசக்தியிடம் ஒரு சித்தாடல் நிகழ்த்தி காட்டினார்.
இந்த அற்புதத்தை கண்ட சக்தி ஒருவர் விவரித்ததை அப்படியே பதிவு செய்கிறோம்.
சித்தர் பீடம் வலம் வந்தவுடன்
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்கள் கருவறைக்குள் சென்றார்கள் அருகில் இருந்த சக்தி வீரராகவன் அவர்களிடம் பால் கேட்டு உள்ளார்கள். உடனே சக்தி வீரராகவன் பால் எடுத்து வந்துள்ளார்.
அந்த பசும் பாலை பரம்பொருள்பங்காரு அம்மா அவர்கள் தனது திரு கரங்களில் ஊற்ற பணித்து உள்ளார்கள். தனது
திரு கரத்தில் வாங்கிய அந்த பாலை கருவறை அன்னை ஆதிபராசக்தி முகத்தில் அப்படியே தெளித்துள்ளார்கள்.
அப்போது தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது, அன்னை ஆதிபராசக்தி முகத்தில் இருந்த பால் வடிந்து வராமல் அப்படியே மாயமாக மறைந்தது.
கருவறை அருகே தொண்டாற்றி கொண்டு இருந்த சக்திகளை பரம்பொருள் பங்காரு
அம்மா அவர்கள் அழைத்து அன்னை அதிபரசக்தி சிலை அந்த பாலை எப்படி தன்னுள் ஈர்த்து கொண்டது என்பதை அனைவருக்கும் காண்பித்தார்கள்.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் அனைவர் முன்னிலையிலும் அன்னை ஆதிபராசக்தி சிலை வடிவத்தில் உயிர் ஓட்டமாக இருப்பதை அனைவருக்கும் இந்த சித்தாடல் வாயிலாக நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.
பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்களின் சித்தாடல் புகைப்படம்
இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் என் தாய்
செய்யும் அற்புதங்களை ஒரு
கருவியை தொண்டர்களிடம்
எடுத்து செல்ல உதவும் என்
அன்னை ஆதிபராசக்தியின் திருவடிகளுக்கு கோடி சரணங்கள்.
இந்த கலியுகத்தில் விஞ்ஞானம், பகுத்தறிவு பேசும் காலத்தில் மனிதர்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தி நல்வழிபடுத்த அன்னை ஆதிபராசக்தி பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் வடிவில் அவதாரமாக வந்திருப்பதை இப்படியான சித்தாடல்களை நிகழ்த்தி தனது இருப்பை மக்களிடத்தில் எடுத்து
காட்டி வருகிறாள்.
பரம்பொருள் பங்காரு அம்மா
அவர்கள் தான் அன்னை
ஆதிபராசக்தி! அன்னை
ஆதிபராசக்தி தான் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் . இந்த உண்மையை உணர்ந்து பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களை மட்டும் மானசீக குருவாக ஏற்று வாழ்வில்
எல்லா வளங்களும் நலன்களும்
பெற்று வாழ்வோமாக!
ஓம்சக்தி!