ஒரு தொண்டருக்கு அன்னை ஆதிபராசக்தி சொன்னளாம் ” பார்த்துப் பக்குவமாக நடந்து கொள்ளடா மகனே ! உன்னைக் கண்டு தெய்வங்களுக்குப் பொறாமை வந்துவிட்டதடா மகனே !”என்றாளாம்.
மாடு மாதிரி உழைக்கிறான். நாய் மாதிரி அலைகிறான் என்பார்களே , அது அந்தத் தொண்டருக்குப் பொருந்தும் ஒரு நிலையான தொழில் இல்லை. திருமணம் செய்து கொண்டு நாலுபேர் போல வசதியாக வாழ வேண்டும் என்ற ஆர்வமில்லை. டெல்லியிலிருந்து ஆன்மிக ஜோதி பயணமா? கொல்கத்தாவிலிருந்து சைக்கிள் பயணமா? எப்படியோ கடன் உடன் வாங்கிக் கொண்டு பறந்துபோய்க் கலந்து கொள்வார். அத்தகைய தொண்டர் அவர். அவரிடம் தான் அன்னை ஆதிபராசக்தி சொன்னாள் ” உன்னை கண்டு தெய்வங்களும் பொறாமை வந்துவிட்டது” என்றாள்.
அன்னை ஆதிபராசக்திக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தொண்டன் ஒருவனைக் கண்டு தெய்வங்களும் பொறாமைப்படுகின்றன என்று தெரிகிறது.
யோகம் பழகி, தியனத்தில் முன்னேறி வருபவர்களைப் பார்த்து தேவர்களே பொறாமைப்படுவார்களாம். அவர்களின் முயற்சிகளைத் தடுப்பார்களாம். தவத்தைக் கெடுப்பார்களாம். பதஞ்சலி முனிவர் சொல்கிறார். யார் இந்த தேவர்கள்? மனிதர்களை விடச் சற்று முன்னேறியவர்கள். அதிமான புண்ணியம் செய்து தேவலோகத்தில் வசிப்பவர்கள். அந்தப் புண்ணியப்பயனைச் சாப்பிட்டு வருபவர்கள். புண்ணியப்பலன் காலியனதும் மறுபடியும் பூமிக்கு வந்து பிறக்க வேண்டியவர்கள். இவர்களும் மனித உடம்புடன் பிறந்தே முக்திக்கு முயல வேண்டும்.
பக்கம்:459.
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-1.