அன்னை ஆதிபராசக்தியின் அசரீரி வாக்கு.

0
642
18.02.1983 அன்று மதுரையில் மகளிர் மன்றம் ஒன்றில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது அப்போது இரவு 10.30 மணிக்கு நிழற்படத்தில் இருந்த பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் உருவம் அசைவதனை அன்பர்கள் பார்த்திருக்கின்றனர். ஒரு வேளை படம் தான் ஆடுகின்றதோ?அசைகிறதோ? என்று உற்றுப் பார்த்திருக்கின்றனர்.படம் அசையவில்லை, படத்திலிருந்த பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் உருவம் மட்டுமே அசைவது தெரிந்தது.
 
அதே நேரத்தில் மதுரை அண்ணாநகரில் வசித்த அன்பர் ஒருவர் காதுகளில் எங்கிருந்தோ ஒரு ஒலி கேட்கிறது. யாரோ ஒருவர் பேசுவது போலக் கேட்கிறது.அக்கம் பக்கத்தில் பார்க்கிறார். யாருமே இல்லை.”மகளிர் மன்றத்தில் ஒர் அற்புதம் நடைபெறுகிறது மகனே!” என்று அசரீரி கேட்கிறது .
ஆச்சரியம் ! கடிகாரத்தைப் பார்க்கிறார். மணி 10.30 .அந்த நேரத்தைக் குறித்து வைத்துக் கொண்டார்.
 
மறுநாள் மகளிர் மன்றத்திற்கு வந்து, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார். ஆம்! அந்த நேரத்தில் தான் எங்கள் மன்றத்தில் “படத்தில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் அசைந்த அற்புதம் நடந்தது ” என மாற்றத்தார் கூறினர்’ஆண்டவன் அசரீரியாகவும் பேசுவது உண்டு என்று புராணக் கதைகள் வாயிலாகக் கேட்டிருக்கிறோம். அது பொய்யன்று! சாத்தியமே என்பதை அன்னை ஆதிபராசக்தி உணர்த்தினாள்’
அன்னை ஆதிபராசக்தியின் தொண்டர் ஒருவர் ஆசிரியராகப் பணி செய்பவர் அவர் ஒரு நாள் சன்னல் ஓரத்தில் நின்றபடி இருக்கும் போது, ஏதோ ஒரு மந்திரத்தை யாரோ ஒருவர் அவர் காதில் சொல்வது போல ஓசை கேட்கிறது. சுற்றும் முற்றும் பார்க்கிறார். அக்கம் பக்கத்தில் எவரும் இல்லை. இதை யாரிடமாவது சொன்னால் சிரிப்பார்களே;நம்ப மாட்டார்களே! என்று தயங்கி, இது பற்றி அன்னை ஆதிபராசக்தியிடம் சென்று அருள்வாக்கில் விளக்கம் கேட்டார்.
 
“நான் தான் மகனே அந்த மந்திரத்தை உபதேசம் செய்தேன். அந்த மந்திரத்தை விடாமல் சொல்லி என்னை வழிபட்டு வா” என்றாள் அந்த ஆசிரியர் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தாரோ, அதற்கேற்ப முற்பிறவியில் தொடர்ந்து செய்து விட்டு விட்ட குறையை நீக்க , இந்தப் பிறவியில் மேலும் தொடர்ந்து செய்வதற்காக இப்படி மந்திர உபதேசம் செய்தாளோ …? பிறவி இரகசியங்கள் யாருக்குத் தெரியும்?
 
ஓம் சக்தி!
பக்கம்: 24- 25.
நான் கண்ட அன்னை.