எல்லாம் நன்மைக்கே

0
917
செங்கல்பட்டில் இறங்கியவுடன் அங்கிருக்கும் காவலர் நீங்கள் செவ்வாடையில் இருக்கிறீர்களே……. ஏன் இங்கு இறங்குகிறீர்கள் என்று
கேட்டவுடன் அவரிடம் நடந்ததைச் சொன்னார். இனி மேல்மருவத்தூருக்கு ரயில் 7 மணிக்கு மேல்தான் உள்ளது. பஸ் நிறுத்தம் சென்று விடுங்கள் என்றார்.
சக்தி. நாகராஜன் பஸ்நிறுத்தம் தெரியாதே என்று சொல்லும்போது அவர்கள் அருகில் ஒருவர் வந்தார். அவர் நாகராஜன் சக்தியிடம் நானும் உங்களைப்போல்தான் மருவத்தூரில் இறங்காமல் இங்கு வந்துவிட்டேன், வாருங்கள் நான் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி பஸ் நிறுத்ததிற்கு அவர்களை அழைத்துச் சென்றார்.
அங்கு 2, 3 பஸ் வந்தும் இதில் ஏற வேண்டாம் என்று அவருடன் வந்தவர் கூறினார். நாகராஜனுக்கு மனதில் குழப்பம். இவரை நம்பி போகிறோமே, பஸ்ஸில் ஏற விடாமல் தடுக்கிறாரா, என்று தவித்தார்.
அடுத்து மருவத்தூர் செல்லும் பஸ் வந்ததும் நாகராஜன் கோபத்தில் இதில் நாங்கள் ஏறப் போகிறோம் நீங்கள் வந்தால் வாருங்கள் என்று சொல்லி ஏறும்போது அவர் நாகராஜன் கையைப் பிடித்திழித்து இதில் ஏறவேண்டாம், அடுத்த பஸ்ஸில் கண்டிப்பாக ஏறலாம் என்று சொல்லித் தடுத்து விட்டார்.
இவரைப்பற்றிய சந்தேகம் அதிகரிக்கிறது, சக்தி. நாகராஜனுக்கு ! அடுத்த பஸ் வந்ததும் எல்லாரும் ஏறிச் சென்றனர். ஏனோ இதற்குமுன் போன பஸ் நம்பர்கூட நாகராஜன் சக்தி நினைவில் நின்றுவிடுகிறது.
பாதி தூரம் போனவுடன் அவருடன் வந்த நபர் தடுத்த பஸ் ஒரு கார் மேல் மோதி நிற்பதைக் கண்டவுடன் சக்தி. நாகராஜன் திரும்பிப் பின்னால் அமர்ந்திருக்கும் அவரைப் பார்க்கிறார். அவரோ சிரித்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரைப் பற்றீ தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது சக்தி. நாகராஜனுக்கு !
அவரிடம் தாங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? ஏன் செவ்வாடையில் வராமல் பேண்ட், சட்டை போட்டு வருகிறீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு அவர் நான் கோயம்புத்தூரிலிருந்து வருகிறேன். திடீரென்று மருவத்தூர் போக வேண்டும் என்று தோன்றியது. உடனே கிளம்பி விட்டேன் என்கிறார்.
மேல்மருவத்தூர் பாலத்தில் கருவறைக்கு முன்பு இறங்கி இதோ மருவத்தூர் வந்துவிட்டது. நீங்கள் போய்க் குளித்துவிட்டு வாருங்கள். நான் 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இவர்கள் அவருக்காகக் காத்திருக்கிறார்கள். நேரம் ஆகியும் அவர் வரவில்லை.
இவர்கள் கோவிலுக்குள் உள்ளே சென்று பாதபூஜை தட்டு வைத்துவிட்டு அமர்ந்திருக்கிறார்கள்.
அப்போது செவ்வாடையிலிருக்கும் ஒரு நபர் இவரிடம் வந்து ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறீர்கள் என்று கேட்கிறார். அப்போது தனக்கு நடந்ததை நாகராஜன் சொல்கிறார். அவரோ நீங்கள் சரியான சமயத்தில் வந்திருந்தால் 5வது தட்டாக வந்திருக்கும். எதற்கும் நேரம் காலம் என்று ஒன்று உள்ளதல்லவா…..?
அந்த நேரத்தில் உங்கள் விதியை மாற்றமுடியாமல் போய் இருக்கும். அதனால்தான் அம்மா உங்களைத் தாமதமாக இங்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறாள் போலும். இப்போது 95வது தட்டு எல்லாம் சரியாகிவிடும் என்கிறார்.
ஆமாம் சக்தி ! எனக்குப் புரிகிறது. இவருக்குச் சொல்லுங்கள் என்று நாகராஜன் அருகிலிருந்த தன்னுடன் வந்த சக்தி. செல்லம்மாள் மற்றும் அவரது கணவரையும் காண்பித்து விட்டுத் திரும்புகிறார்.
அங்கே அந்தச் செவ்வாடை பக்தர் இல்லை ! கண்மூடிக் கண்திறப்பதற்குள் மறைந்து விட்டார்.
சக்தி. நாகராஜனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. இவருடன் ஆரம்பத்தில் செங்கல்பட்டிலிருந்து வந்ததும் அம்மாதான். அவருக்கு மனதில் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்ப்பதற்காக செவ்வாடையில் வந்து பதிலும்
தந்துவிட்டுச் சென்று விட்டவளும் நம் அன்னைதான்.
ஆனந்தத்தில் பேச நா எழாமல் உள்ளம் முழுவதும் நம் அம்மாவின் கருணையை நினைத்து, தனக்கு முன் எத்தனை தட்டுகள் என எண்ணிப் பார்க்கையில் 95வது தட்டாகவே இருந்தது. தன்னுடன் அற்புதம் நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கும் தாயை மனதார வணங்கிப் பாதபூஜைக்குச் சென்றார்.
அவரிடம் அம்மா, “ நான் உன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறேன். இப்போது அறுவைசிகிச்சை வேண்டாம். எண்ணெயில் பொறித்ததைச் சாப்பிடவேண்டாம். ஆடிப்பூரத்திற்கு இங்கு வந்து கஞ்சிக்கலயம் எடுங்கள் ! பிறகு என்னை வந்து பாருங்கள்!” என்று சொல்லி ஆசிர்வதித்தாள் நம் அன்னை.
ஆம் ! இப்போது சக்தி. செல்லம்மாள் உடலில் நல்ல முன்னேற்றம். சப்பிடவே முடியாமல் கக்ஷ்டப்பட்ட அவர் இப்போது சாப்பிடுகிறார். எங்கள் மன்றத்திற்கு சக்தி. நாகராஜன் வந்து கண்ணீருடன் அனைத்தையும் கூறி இந்த ஏழைக்குக் காட்சி கொடுத்திருக்கும் அம்மாவின் கருணையை எண்ணி எண்ணி வியக்கிறார்.
நாங்களும் அகம் மகிழ்ந்து எங்கள் மன்றத் தொண்டருக்குக் கிடைத்த இந்த அற்புதக் காட்சியை சக்திஒளிக்கு சமர்ப்பிக்கிறோம்.
 
 
நன்றி.
சக்தி, முசிறி மன்றம்.
பக்கம்:20-22.
சக்திஒளி ஜனவரி 2009.