மறுபிறவி கொடுத்த பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்!

0
809

கடந்த 25 ஆண்டுகளாக பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் செவ்வாடைத் தொண்டனாகப் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்புதுப்பட்டி
மன்றத்தில் குடும்பத்துடன்
தொண்டு செய்து கொண்டிருக்கிறோம்.
எனக்கு மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தில் நடைபெறும் தைப்பூச சக்தி மாலை இருமுடி , ஆடிப்பூரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருளைப் பெறுவோம்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சொத்துப் பிரச்சனையில் என் குடும்பத்தாரால் ஏமாற்றப்பட்டு அனாதையாக நின்றேன். அப்பொழுது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பக்தர் ஒருவர் என்னிடம் ஒரு ஒலிநாடா கேசட் ஒன்றைக் கொடுத்து கேட்கச் சொன்னார். நானும் அதைக் கேட்டேன் அதில் , “நான் அனாதையில்லை அம்மா நீ இருக்கையில்”என்ற பாடலைக் கேட்டேன்.உடனடியாக மேல்மருவத்தூர் சென்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்தேன்.
அன்று பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்தன் நெஞ்சில் கை வைத்து உன்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்கள். அன்றிலிருந்து அம்மாதான் துணை என்று எண்ணி நாங்கள் எதைச் செய்வதற்கு முன்பும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்தும், பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் சொல்படியும் நடந்து வருகிறோம். என் இரண்டு மகள்களுக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருளால் சந்தோசமாகவும், சிறப்பாகவும் இருந்த காலத்தில் தீடீரென்று எனக்குப் பெரிய சோதனை வந்தது. 04.04 .10 ஆம் ஆண்டு தலை முதல் கால்வரை தோல் வியாதியால் ( சொரியாசிஸ்) செதிள் செதிளாக தோல் உரியும் நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து முகம் விகாரமாகி ஆள் அடையாளமே தெரியாமல் உருக்குலைந்தது.
திருச்சியில் பிரபலமான தோல் மருத்துவமனைக்குச் சென்று பத்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தார்கள்.
சிகிச்சை அளித்த மருத்துவரே நான் ஒன்றும் செய்ய இயலாது.
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் தான் உங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். என்னைப் பார்த்த அனைவரும் நான் பிழைக்க மாட்டேன் என்றே நம்பிக்கை இழந்து கூறினர்.
திருச்சி சீனிவாசநகரில் உள்ள சக்தி பீடத்திற்கு சென்று அன்னை ஆதிபராசக்தியின் திருவடிகளில் விழுந்து அழுதோம். அப்பொழுது சக்திபீடத் தலைவி மேல்மருவத்தூருக்கு சென்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்து பாருங்கள். தீர்வு கிடைக்குமென்று கூறினார்.
நாங்களும் மேல்மருவத்தூர் சென்றடைந்தோம். மறுநாள்
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்து பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் திருமுகத்தை நானும் என் மனைவியும் பார்த்தோம். அம்மா அவர்கள் என் மனைவியைப் பார்த்து,
“உயிரைக் காப்பாற்றிக்கொடுத்து
விட்டேன்.”! நீ கவலைப்படாதே!
என்று கூறினார்கள்
வேப்பெண்ணெயைக் காய்ச்சி, துளசி,வில்வ இலை, முருங்கை இலை, பச்சைக் கற்பூரம் இவற்றைச் சேர்த்து கலக்கி நன்றாக உடல்முழுவதும் தேய்த்து சீயக்காய் தூளைத் தேய்த்துக் குளித்துவிட்டு கருவறையில் விபூதியை வாங்கி உடம்பில் தேய்த்துக் கொள். என்று கூறி சித்ரா பௌர்ணமி வேள்வியிலும் கலந்து கொள்!
என்று கூறினார்கள் .
என் மனைவிடம் உப்பு, புளி,காரம் நன்றாகக் குறைத்தும் மீன் கருவாடு நீக்கியும், எந்த மருத்துவ சிகிச்சையும் இவருக்கு பலனளிக்காது. எங்கும் அலைய வேண்டாம். நான் சொன்னதைச் செய்தாலே போதும் உன் உடல்நிலையை பழைய நிலைக்கு மாற்றித் தருகிறேன். என்று கூறினார்கள்.
நாங்களும் குடும்பத்துடன் பத்து நாட்கள் தங்கினோம். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் சொல்படி நடந்தேன். ஒரு வருடத்தில் என் உடல்நிலை நல்ல நிலையிலும் பழைய உருவமும் பெற்றேன்.என்னைப் பார்த்தவர்கள் அதிசயித்துப் போனார்கள். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் திருவடியும், பார்வையும் என் வினைகளை அழித்துவிட்டது.தொடர்ந்து பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் அருளாசியால்நன்றாக இருக்கிறோம்.

ஓம் சக்தி
சக்தி N.கோவிந்தராஜ்,பொன்புதுப்பட்டி
பக்கம்:(22-23),சக்திஒளி பிப்ரவரி 2013.