தஞ்சாவூா் உச்சிஷ்ட கணபதி உபாசகா்

0
1385

தஞ்சை மாவட்டத்தில் ஓா் அன்பா் உச்சிஷ்ட கணபதியை உபாசனை செய்து ஆன்ம முன்னேற்றம் பெற முயன்றவா். சற்றே வயதானவா்.
தனக்கு அந்திமககாலம் நெருங்கிவிட்டதை உள்ளுணா்வு மூலம் அறிந்துகொண்ட அவா் தன் சீடரை அழைத்து “நான் இந்த நாளில் இந்த மணிக்குள் சித்தியடையப் போகிறேன். எனக்குச் செய்ய வேண்டிய சமாதிக் கடன்களை நீயே செய்துவிடு! வேறு உறவினா் யாரும் செய்யவேண்டாம். இதோ இந்த இடத்தில் தான் சமாதி எழுப்ப வேண்டும். இத்தனை மூட்டை உப்பு விபூதி வாங்கி வைத்துக் கொள்” என்றெல்லாம் உரிய கிரியை முறைகளை முன்னரே கூறியிருந்தார்.
எந்த நாளில் தாம் சித்தியடையப்போவதாகச் சீடரிடம் கூறியிருந்தாரோ எந்த நாளில் தன் ஆன்மா உடற்கூட்டை விட்டுப் பிரியும் என்று சொல்லி இருந்தாரோ அந்த நாளும் வந்தது. அவா் நிஷ்டைக்குத் தயாரானார். உரிய கிரியையைச் செய்யச் சீடரும் தயாரானார்.
நிஷ்டையும் கூடவில்லை. உயிரும் பிரியவில்லை. இத்தனைக்கும் இவா் உயா்நிலை உபாசகா் தான். எப்படித் தான் கணக்குப் பொய்த்தது? புரியவில்லை.
தெய்வ சங்கல்ப்பம் வேறாக இருக்கிறதே………….. என்று கூறியபடி சமாதிக்குழியிலிருந்து வெளியேறி வந்தார். சில மாதங்கள் கழித்து அந்த உபாசகரும் சீடரும் சென்னைக்கு ஒரு வேலையாகப் புறப்பட்டனா். வழியில் என்ன தோன்றியதோ? மேல் மருவத்தூரில் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு அன்னை ஆதிபராசக்தியின் சித்தா்பீடத்தை வலம் வந்தார். அன்னை ஆதிபராசக்தியிடம் அருள்வாக்குக் கேட்க விரும்பிச் சென்று அமா்ந்தனா். “மகனே! உலக நன்மைக்காக இன்னும் சில நாள் நீ இருக்க வேண்டி இருக்கிறது.
அதனால் தான் உன்னை நான் அழைத்துக்கொள்ளவில்லை. உன் கணிப்புத் தவறிப்போய் விட்டதே!
நான் தான் உன் ஆயுளை நீட்டிக் கொடுத்திருக்கிறேன்” என்றாள் அன்னை ஆதிபராசக்தி.
இந்த பங்காரு அம்மா அவர்களுக்கு இந்த ரகசியமெல்லாம் எப்படித் தெரியும் என்று உடன் வந்த சீடா் ஆச்சரியப்பட்டுப் போனார். அருள்வாக்குச் சொல்வது யார் என்பதை அந்த உபாசகா் மட்டும் புரிந்து கொண்டார்.
ஓம் சக்தி!
நன்றி
சக்தி.R.கோவிந்தராஜன்
அண்ணா நகா். சென்னை – 40
மருவூா் மகானின் 65வது அவதாரத்திருநாள் மலா்.