மேல்மருத்தூரில் மஹாளய அமாவாசை வேள்வி பூஜை :

0
1135

ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விழாவை முன்னிட்டு வேள்வி பூஜையை ஆன்மிககுரு பங்காரு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை விழாவை முன்னிட்டு, மக்களை வாட்டி வரும் கொரானா நோய் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு, மீண்டும் இயல்பு நிலை திரும்பவும், உலக மக்கள் அமைதி பெற்று நிம்மதியுடன் வாழவும்; மற்றும் முன்னோர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சங்கல்பம் செய்து, சித்தர்பீட வளாகத்தில் அமைக்கப்பட்ட வேள்வியில் இன்று வியாழக்கிழமை காலை 9.45 மணிக்கு ஆன்மிககுருஅருள்திரு பங்காரு அம்மா அவர்கள் எண்கோண வடிவ பெரிய யாககுண்டத்தில் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை துவக்கி வைத்தார்.
அமாவாசை முன்னிட்டு அமைக்கப்பட்ட எண்கோண பெரிய யாககுண்டத்தில் பக்தர்கள் நவதானியங்களையும், நவசமித்து குச்சிகளையும், காய்கறி மற்றும் தானிய வகைகளையும் யாகத்தில் இட்டு அன்னை ஆதிபராசக்தியை வழிபட்டனர். வருகை தந்த பக்தர்களுக்கு அரசின் விதிமுறைகளை பின்பற்றி சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வந்து செல்ல ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் அறிவுறித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அறநிலைய தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலை வகித்தார். ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டி.ரமேஷ், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி அறநிலை அறங்காவலர் உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல் தாளாளர் டாக்டர் ஸ்ரீலேகா செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கடலூர் மாவட்டத்தை சார்ந்த நெய்வேலி, பெண்ணாடம், பண்ருட்டி ஆகிய சக்திபீடங்களை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.