இயற்கை என்பதே ஒரு பெரும் சக்தி

0
1428

“இயற்கைக்கு எந்த மதமும் இல்லை! எந்தச் சாதியும் இல்லை. எந்த நாடென்றும் இல்லை. எந்த இனமும் இல்லை! எந்த மொழியும் இல்லை.

அது யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பது இல்லை; கொடுக்கும் பொழுதும் எடுக்கும் பொழுதும்!

அது எப்போதும் தர்மத்தைப் பின்பற்றுகிறது. தான் சுனாமியாக வரும் பொழுது கூட, இரண்டு மணித் துளிகளுக்கு முன்பாக, பூமியில் அதிர்வலை ஏற்படுத்தி, அதை அறிவித்து விட்டு வருகிறது. இது எந்த விஞ்ஞானத்தாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பெரும் சக்தி!”

இயற்கையை வெல்ல முடியாது.
ஆனால் கட்டுப்படுத்த முடியும்!

எப்படி?

மனித எண்ணங்களில் சுத்தம் வந்தால் தான் இயற்கையும் சாந்தம் அடையும்.

இயற்கையை வெல்ல முடியாது. அதை முழுவதும் கண்டு பிடிக்க முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும்.

அதன் சீறும் குணத்தைத் தணிக்க முடியும்.

எப்படி முடியும்? எப்போது முடியும்?

இயற்கையை இறை என்று மனதார உணரும் போது!

முழுமனதுடன் அதை வழிபடும் போது!

அதன் தன்மைகளை மதிக்கும் போது!

அதன் உண்மைகளைப் புரியும் போது!

உள்ளத்தால் வெள்ளையாக வாழும் போது!
உழைப்பே உயர்வு என்று உணரும் போது!

தர்மமே தரணியை உயர்த்தும் என்பதை மனதார நம்பும் போது!

அதைச் செயல்படுத்தும் போது!

பிற உயிர்களின் மேல் அன்பை வளர்த்துக் கொள்ளும் போது!

பண்பைப் பெருக்கும் போது!

பாசத்தை வளர்க்கும் போது!

நேசத்தை உயர்த்தும் போது!

ஆசைக்கு அணை கட்டும் போது!
பேராசை பேரழிவு என்பதைப் புரியும் போது!

புரிந்து மனதில் ஆழப் பதியும் போது!

நன்கு உழைக்கும் போது!

உழைத்து ஊதியம் பெறும் போது!

ஊதியத்தின் ஒரு பகுதியைத் தானமாய்த் தரும் போது!

இத்தகைய குணங்கள் மனதில் குடியேற வேண்டும்.

ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்கள் அருளிய குரு உபதேசங்கள்.