வெள்ளலூரில் வரவேற்க வந்த பெண்மணி.

0
836

அருள்திரு அம்மா அவர்களை வரவேற்கப் பல்லாயிரக் கணக்கான மக்கள் அதிகாலை முதல் மன்றம் அமைந்திருந்த உமா மகேஸ்வரி கோயிலில் குழுமியிருந்தனர். 108 மகளிர் கைகளில் அகல் விளக்கேந்தியவாறு அன்னை ஆதிபராசக்தி யை வரவேற்கக் காத்திருதனர்.

அதற்குச் சற்று முன்பாக சுமார் 55 வயதுடைய பெண்மணி ஒருவர் கைகளில் விளக்கேந்தி காந்திபோது திடீரெனறு மயங்கி விழுந்தார் விட்டார். நாடித்துடிப்பு அடங்கிப் போய்விட்டது. வாயில் சிறிது தண்ணீர் ஊற்றித் தெளிய வைக்க முயன்றார்கள். அது உள்ளே செல்லாமல் வெளியே வழிந்தது விட்டது. அந்த பெண்மணி இறந்து விட்டதாக எண்ணி மன்றப் பொறுப்பாளர்கள் துடிதுடித்தனர். பதைபதைத்தனர். அம்மா வருகிற இந்த நேரத்தில் இப்படி ஒர் அசம்பாவிதம் நடந்தது விட்டதே எனக் கலங்கினர். ஆயினும், உணர்வற்றுக் கிடந்த அந்தப் பெண்மணி மீதும் ஓம் சக்தி ! பராசக்தி! என்று கூறியபடி, கலச தீர்த்ததைத் தெளித்து, தாயே நீ வரும்போது இப்படி நடந்து விட்டதே! உனக்கே பழி வருமே ! உனக்கும் பழி வராமல் எங்களுக்கும் பழி வராமல் காப்பாறு! ‘என முறையிட்டனர். அவ்வளவு தான் 10.15, நிமிடங்களில் அந்த பெண்மணிக்கு உணர்வு திரும்பியது. கண் விழிக்காத நிலையில் ஓம் சக்தி ! பராசக்தி ! என்று முனகினார்.

அதன் பிறகு சற்று கழித்து அருள்திரு அம்மா அவர்கள் அங்கு வந்து சேர்த்தார்கள்.

பிரம்மாண்டமான கூட்டம். பத்து ஊர் மக்களும் திரண்டு வந்திருந்தனர். அதன்பிறகு சின் முத்திரை தரித்தாவாறு அருள்திரு அம்மா அவர்கள் அருட்பிரசாதம் வழங்கினார்கள்.

(கோவை மாவட்டத்தில் ஆச்சரியப்பீட நாயகர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் ஆன்மீக பயணத்தின் போது நடந்த அற்புங்கள்)

பக்கம்: 406-407.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம் -2.