7.8.1986 அன்று அன்னை ஆதிபராசக்தி புற்றுமண்டபத்தில் பொது அருள்வாக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். அன்று அருள்வாக்குக் கேட்டவர்களில் சக்தி ஒளி மாத இதழ் முன்னாள் ஆசிரியர் திரு. இராமசாமி அவர்களும் ஒருவர்.

அருள்வாக்கு சொல்லிக்கொண்டு வந்த அன்னை, தீடீரென்று பாதியில் அருள்வாக்குச் சொல்லுவதை நிறுத்திக்கொண்டு சும்மா இருந்தாள்.

அப்போது… எங்கிருந்தோ ஒரு சினிமா பாட்டு ஒலிக்கத் தொடங்கியது. எங்கிருந்து இந்தப்பாட்டு வருகிறது? என்று புரியாமல் எதிரே இருந்தவர்கள் திகைத்தார். அங்கும் இங்கும் பார்வை சென்றது.

அப்போது அன்னை ஆதிபராசக்தி தன்னெதிரே அமர்ந்திருந்த பெண்மணி ஒருவரைச் சுட்டிக்காட்டினாள். அவர் தன் புத்தகங்களில் மறைத்து வைத்திருந்த டேப்ரிக்கார்டரிலிருந்த பாட்டு வந்துகொண்டிருந்தது. அன்னை தன் கையை உயர்த்தியதும் பாட்டு நின்றுவிட்டது.

டேப்ரிக்கார்டர் வைத்திருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்து” மகளே! ஆரம்பத்திலிருந்து போடு பார்க்கலாம்” என்றாள் அன்னை ஆதிபராசக்தி. அன்னை கூறியபடி டேப்ரிக்கார்டரை இயக்கினார்.மீண்டும் சினிமாப் பாட்டுதான் வந்தது. அன்னை சொல்லிய அருள்வாக்குகளில் ஒரு வார்த்தைகூடப் பதிவாகவில்லை.

அந்தப் பெண்மணியைப் பார்த்து அன்னை ஆதிபராசக்தி மேலும் கூறினாள்.

“மகளே! என் சம்மதமில்லாமல் மறைவாக என் அருள்வாக்கைப் பதிவு செய்ய முயன்றாயே முடிந்ததா? இது தவறு என்று தெரிந்தும் செய்யலாமா?” என்று கடிந்து கொண்டாள்.

அந்தப் பெண்மணியின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

பக்கம்:204.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தல வரலாறு. பக்கம்-1.