24/07/1988 அன்று சென்னையில் இயற்கை வள மேம்பாட்டு ஆன்மீக மாநாடு நடந்த மேடையில் மேற்கு திசையில் ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அமர்ந்து இருக்க அவருக்கு முன் தொண்டர்கள் இருக்க வங்க கடலில் அலையின் சீற்றம் அழகாய் சுழன்று வர காதுக்கு இனிய அலைகளின் இசையுடன் ஓம்சக்தி மந்திரங்களும் ஒலிக்க செவ்வாடை தொண்டர்கள் அம்மாவை வணங்கி வந்தனர் இரவு பகல் பாராமல் தொண்டு செய்த பிள்ளைகளுக்கு நேரில் வந்து காட்சி கொடுக்கும் அழகே தனி அழகு. மஞ்சள் நிற பட்டு சேலை கட்டி முத்து பவளம் மாலையை நாகமாக மாலையிட்டு தங்க தாரகை மின்னும் நட்சத்திரமாய் கையில் சூலம் ஏந்தி காட்சி கொடுத்த அவளின் அருள் தரிசனம் பார்ப்பவர் கண்களுக்கு அருள்திரு பங்காருஅடிகளாரை போலவும் மறு உருவம் அன்னை ஆதிபராசக்தி உருவிலும்மற்றும் வயதான பெண் போலவும் காட்சி தந்து அனைவரது உள்ளங்களில் அன்பை பாசத்தை கொடுத்த எங்கள் அன்னை
ஆதிபராசக்தியே என் பிறவி பயனை அடைந்தேன் வேறு என்ன வேண்டும் இந்த உலகில் எனக்கு எங்களுக்கு பங்காருஅடிகளாரும் ஒன்றுதான் அன்னை ஆதிபராசக்தியும் ஒன்றுதான் என்று இந்த உலகத்திற்கு தெரிவிக்க வந்த எங்கள் குல தெய்வமே உன்னை போற்றி வணங்குகிறோம் தாயே !இந்த நிகழ்ச்சியை அருள் திரு அம்மாவிடம் அருள்வாக்கில் கேட்ட போது ஆமாம்டா மகனே பங்காருஅடிகளாருக்கு மாலையிட்டு காட்சி தர வந்தேன். நீங்கள் எல்லோரும் எழுந்து கூச்சலிட்டு ஓடி வந்ததால் மாலை போட முடியாமல் போய்விட்டது என்று அருள்வாக்கில் அன்னை ஆதிபராசக்தி சொன்னாள்