மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றத்தின் ஏற்பாட்டில் நிவாரணப் பொதிகள் விநியோகம்!

0
938

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை மக்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜே.259 கல்வியன்காடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் 75 குடும்பங்களுக்கே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொருட்கள் இன்றைய தினம் இரண்டாம் கட்டமாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றம் ஏற்பாட்டில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிவாரண பொதிகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி யாழ் மன்றம் அங்கத்துவர்கள் மக்களுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.