சென்னையில் நம் அன்னையின் பக்தர் ஒருவர் அவருக்கு தொழில் ரீதியாகப் பல சோதனைகள் கப்பல் வியாபாரம் கோடிக்கணக்தில் சம்பாதித்தவர், பிறகு சிறுக சிறுக நஸ்டம் அடைந்து வந்தார்,
யரோ அவருக்கு சக்கரம் ஒன்றை வரைந்து கொடுத்தார்கள் அதனை தொழில் நிறுவனத்தில் பூஜை செய்து வந்தார்,
தொழி நஸ்டம் கருதி அம்மாவிடம் வந்தார்,
ஒரு முறை நம் ஆன்மிக குரு அருள் திரு அடிகளார்அவர்களைத் தம் தொழில் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார், தனக்குச் சொந்தமான உள்ள கப்பல் தளத்திற்கும் அழைத்துச் சென்றார்,
கப்பலைச் சுற்றி வந்த அடிகளார் பார்வையிட்ட போது தாம் வழிப்பட்டு வந்த சக்கரத்தை எடுத்துக் கொண்டு வந்து, அருள் திரு அடிகளார் அவர்களிடம் கொடுத்தார்,
அதனை வாங்கிப் பார்த்த அடிகளார் இதெல்லாம் உங்களுக்கு இனி தேவையில்லை என்று சொல்லி அதனைக் கடலில் வீசி எறிந்து விட்டார், அடிகளாரோடு கப்பல் தளத்தில் மேலும் சிலர் இருந்தார்கள்.
அந்த சக்கரத்தை அடிகளார் கடலில் வீசியது அந்த தொழிலதிபருக்கு உள்ளுர வருத்தமாகப் போய் விட்டது ,அது வரை கலகலப்பாகப் பேசி வந்தவர் பேச்சில் சுவாரஸ்யமின்றிக் கலந்து கொண்டார், அடிகளார் அதனைக் கவனித்து விட்டார்,
என்ன சார் அந்தச்சக்கரத்தைக் கடலில் வீசி எறிந்து விட்டது உங்களுக்கு வருத்தமாகப் போய்விட்டது அவ்வளவுதானே,, இதோ அதையே வரவழைத்துக் கொடுக்கிறேன் போதுமா – – – – எனச் சொல்லி.கை நீட்டினார் கடலில் வீசியெறியப்பட்ட அந்தச் சக்கரம் அடிகளார் கைக்கு வந்து விட்டது,
ஆரம்பத்தில் அடிகளாரின் சக்தி எப்படிப்பட்டது என்பது அந்த நாள் தொண்டர்கள் பலருக்குத் தெரியாது அடிகளாரும் தன்னை மறைத்துக் கொண்டுதொண்டர்களுடன் சகஜமாகப் பழகி வந்த காலம் அது ,மேற்கண்ட சம்பவத்திற்குப் பிறகு தான் அடிகளாரின் சக்தி பற்றி ஒரளவு புரிந்து கொண்டார் அந்தத் தொழில் அதிபர்.