புதிதாக எனக்குக் கோயில் கட்ட வேண்டாம். இருக்கிற கோயில்களை ஒழுங்காகப் பாதுகாத்தால் அதுவே போதுமானது. இன்றைய உலகில் செய்ய வேண்டிய பணி என்ன தெரியுமா? என் மக்கள் கோடிக்கணக்கானவர்கள் ஒரு வேளைச் சோற்றுக்கும் வழியின்றி உடுக்க உடையின்றி வாடுகின்றனர். அவர்கள் துயர் தீர்த்தல் வேண்டும். இக்கோயிலுக்கு வரும் அன்பர்கள் சிலராவது இதனைச் செய்ய முன்வர வேண்டும்.
உன் மனமே உனக்கு எதிரி:
“ஒரு குழந்தையிடம் துப்பாக்கியைக் கொடுத்தால் அது தன்னைத் தானே சுட்டுக் கொள்ளும். அதுபோல உன் மனத்தை நீயே கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால் அது உன்னையே அழித்துவிடும். ஒரு பக்கம் கட்டுப்படுத்தினால் மறுபக்கம் அவிழ்த்துக் கொள்ளும் இயல்பு படைத்தது மனம்! ஆகவே, தியானத்தையும் ஆன்மிகத்தையும் துணை கொண்டு உன் மனத்தை அடக்க வேண்டும்.”
??அன்னையின் அருள்வாக்கு??