ஒரு நாள் சிவபெருமானைக் கும்பிடுவான்; இன்னோரு நாள் திருமாலைக் கும்பிடுவான்; விநாயக சதுர்த்தியன்று விநாயகரைக் கும்பிடுவான்; மஞ்சள் ஆடையணிந்து திருப்பதிக்குச் செல்வான்; இருமுடி ஏந்தி சபரிமலைக்கும் செல்வான்; பழனி மலைக்குக் காவடி எடுத்து செல்வான்.

இந்த பக்தனுக்கும் இறுதி நாள் வந்தது.

வைகுண்டத்தில் மகா விஷ்ணு படுத்திருந்தார். அங்கே மகாலட்சுமி அவரது திருவடிகளை வருடிக் கொடுத்தபடி, பாத சேவை புரிந்தபடி இருந்தாள்.

திடீரென்று எதையோ எண்ணிக்கொண்டு, விருட்டென்று எழுந்தார் மகாவிஷ்ணு! பத்து அடி சென்றதும், எந்தப் பரப்பரப்பும் காட்டாமல் திரும்பி வந்து அமர்ந்தார்.

“ஏன் ? என்ன விஷயம் ? அப்படி வேகமாகப் போய் , போன வேகத்தில் திரும்பி விட்டீர்களே…. ? என்னவாயிற்று உங்களுக்கு ….? எனக் கேட்டாள் மகாலட்சுமி.

” அதுவா…… வேறொன்றும் இல்லை. பூலோகத்தில் பக்தன் ஒருவன் சாகும் தறுவாயில் , ஆற்று வெள்ளத்தில் தத்தளித்தபடி இருக்கிறான். நாராயணா! நாராயணா! என்று அழைத்தான்; அதனால் தான் ஓடினேன்.

நான் வரும்வரை அவனுக்குப் பொறுமையில்லை. முருகா! முருகா! என்று கூப்பிட ஆராம்பித்தான். சரி! இனி முருகன் பொறுப்பு! என்று திரும்பி விட்டேன்” என்றார்.

நல்லது முருகன் அவனைக் காப்பாற்றட்டும்! என்றாள் மகாலட்சுமி.

அந்த முருகன் அவனைக் காப்பாற்றினானா? அது தான் இல்லை. இப்போது அவன் முருகனையும் விட்டு விட்டு விநாயகனைக் கூப்பிட ஆராம்பித்து விட்டான்.

சரி! இனி விநாயகன் பொறுப்பு! என்று வந்த வழியே முருகன் திரும்பி விட்டான்.

விநாயன் புறப்படுகிற வேளையில், ஆற்று வெள்ளம் அந்த பக்தனை இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது”என்று சொல்லிக் கதையை முடித்தார்.

*அன்னைனையின் அவதார காலம்:*
????????

? *அன்னை ஆதிபராசக்தி, அடிகளார் என்கிற மானிடச் சட்டை தாங்கி, அவதார நோக்கத்துடன் வந்து விளையாடுகிற பொற்காலம் இது…

*நம்மையெல்லாம் தன் திருவடிகளில் தோய்த்தெடுத்து, அழுக்குகளை அகற்றி, பிறவிப்பயனை நல்க வேண்டியே அன்னை நம்மோடு பேசுகிறாள்.*

மனத்தை ஒரு தெய்வத்திடம் வை என்கிறாள் அன்னை

ஒன்றைப் பிடி! உறுதியாகப் பிடி!
– என்பது அதன் குறிப்பு.??

? *அம்மா! தாயே! நீயே எங்கள் இஷ்ட தெய்வம் !*

? *நீயே எங்ஙள் குலத் தெய்வம்!*

? *நீயே எங்கட்கு குரு!*

*காலம் காலமாக நாங்கள் ஆன்மிகத்தில் அநாதைகளாகக் கிடந்தோம்; அதானால் எங்கள் சிறுமைகளையும், புன்மைகளையும் பொறுத்துக் கொண்டு, மன்னித்து அருள்வாயாக!*
?? *இனி ஒரு*
*வேறு தெய்வம் எங்கட்கு வேண்டாம்* ??

?? *நீயே எங்கட்கு சகலமும். இந்தப் பிறவியில் எங்கள் பொறுப்புகளையும், கடமைகளையும் உன் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டு, உனக்கே பணி செய்வோம். எங்களைக் கை விட்டு விடாதே!* ???

?? *பெரிய பெரிய முனிவர்கள், தவ சீலர்கள், தேவர்கள், மூவர்கள் எல்லோரும், உன் அருள்சக்தி பெற்று, உனக்குப் பணி புரிகிறார்கள். அத்தகைய நீ, கலக மானிடப் பூச்சிகளாக உள்ள எங்களையும் ஆட்கொண்டு, தொண்டு செய்யும் வாய்ப்புத் தந்தாய்! உன் கருணையே கருணை! – என வியந்து போற்றுகிறது இந்த மந்திரம்.*

1008 போற்றி மலர்கள் விளக்க உரை நூல்
பக்கம் – 440, 441,442.

மேலே உள்ள கதையின் படி நம் அனைவரும் மருவத்தூர் அம்மாவை மட்டுமே நம்பி இருமுடி ஏந்தி ஆலயம் வர வேண்டும். அதை விட்டு விட்டு இருமுடி ஏந்தி வரும் போது அனைத்து ஆலயங்குளுக்கும் சென்று வந்தால் மேலே உன்ன கதையின் படித்தான் வாழ்க்கை அமையும்.