மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெற்ற புத்தாண்டு விழாவில் ரூ.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் வழங்கினார்
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 2020-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா கலச விளக்கு வேள்வி பூசை, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சித்தர்பீடம் மலர்களாலும், ஒளி விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்பட்ட இவ்விழா, நேற்று 31ஆம் தேதி விடியற்காலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் துவங்கியது. காலை 4 மணிக்கு கருவறை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது……