ஒரு ஹோட்டல் தரமான உணவு, குறைவான விலையில் உணவு கொடுத்தால் மக்கள் அது பற்றி சொல்லி சொல்லி ஹோட்டல் வளர்ச்சி அடைகிறது.
அதுபோல ஒருகோயிலில் மக்கள் வேண்டுதல்கள் நிறைவேறும்போது மக்கள் அது பற்றி சொல்லி சொல்லி கோயில் வளர்ச்சி அடைகிறது.
*அன்னை கொடுத்த புள்ளி விவரம்:*
——————————
1 9 8 2 -ஆம் ஆண்டு ஆதிபராசக்தி அறநிலைப் பொறுப்பாளர்களுக்கு, அருள்வாக்கு அளித்தபோது அன்னையே ஒரு புள்ளிவிவரம் கொடுத்தாள்.
*அந்த ஆண்டு எத்தனை பேர் என்னென்ன பிரச்சனைகளோடு வந்தார்கள்? எத்தனை பேர்க்கு*
*அருள் பாலித்தேன்? சிலர் பலன் பெறாமல் போனது ஏன்? என்று குறிப்பிட்டாள்.*
புற்றுநோயில் மறுபிறவி..
*“1982-ஆம் ஆண்டு புற்றுநோயுடன் என் சந்நிதிக்கு வந்தவர்கள் 1200 பேர். அவருள்குணம் பெற்றவர்கள் 1100 பேர். குணமடைந்து கொண்டு வருபவர்கள் 50 பேர்.”*
*”நான் சொன்னபடி மருந்துண்ணாமல் அலட்சியமாக இருந்தவர்கள் 25 பேர். இறந்தவர்கள் 25 பேர். காரணம் வினைப்பயன்.”*
திருமணம்.
*”திருமணம் கைகூட வேண்டி வந்தவர்கள் 5000 பேர். இவருள் 4001 பேர்க்குத் திருமணம் முடிந்துவிட்டது. மற்றவர்களுக்குத் திருமணம் ஆகும் நிலை உருவாகி வருகிறது.”*
*”குழந்தைப் பேறு வேண்டி வந்தவர்கள் 501 பேர். அருள் பெற்றவர்கள் 329 பேர். எஞ்சியவர்க்கு உரிய காலம் வரும்போது கிடைக்கும்” என்றாள் அன்னை.”*
–அன்னையின் அருள்வாக்கு.