தேவே.. உனக்கென்ன நீ பரம்பொருள்!

0
1285

மருவூரார்!

தேவே..
உனக்கென்ன நீ
பரம்பொருள்!
உலகமே அழிந்தாலும் ..
உலகத்தை அழித்தாலும்..
படைப்பாய் புது பொருள்!

நான் சாதாரண மனிதன்..
சங்கடத்தால் அழுவேன்!
நீ..
கொடுக்க கொடுக்க..
கேட்பது எங்கள் நிலை!
அடுத்து அடுத்து
தொடர்கிறதே சூழ்நிலை!

வயதுதோறும் மாறிவருதே
தொல்லைகள்!
மனிதனாக பிறந்ததினால்
இல்லை எல்லைகள்!

கேட்டது பல..
விட்டது பல..
அனைத்தையும் சேர்த்து
தீர்த்தாய் எதைசொல?

இறக்கும்வரை ஏதாவது
வேண்டியே.. மனம்..
ஏங்குகிறதே சரணாகெதி..
இல்லாததால் தினம்!

மேலோட்ட பக்திநிலை..
சின்ன..பிரச்சனைக்கும்
புத்திஇலை!

ஆட்டிவைப்பாய்
ஆடுகிறோம் என்றாலும்..
ஆணவத்தில்
உணர்வதில்லை
எந்நாளும்!
கேட்பதில்லை
அருள்வாக்கில்
நீ சொன்னாலும்!

உன்னால் முடியும். .
என்னால் முடியாது!
உயிர்நோய் அவதியிலும்
தெளிவேது!

கொடுமை பட்டாலும்
குடும்பத்தை விட
மனமில்லை…
கொற்றவனே..
உனையன்றி
காப்பாற்றுவார்
இனியில்லை!

….சபா. .திருமுட்டம்….