கடுமையான மன உளைச்சல். எத்தனை சோதனை.

யாரோ செய்த பெருந்தவறு.
நம்மை வாழவிடாமல் துரத்துகிறது.

இனி தாங்கிக் கொள்ளவே முடியாது.

போதும் இந்த வாழ்வு.
காசு, பணம், புகழ் எல்லாமே இருந்து என்ன பயன்..?

மானம் போனபின் வாழ்வது எதற்கு….?

தற்கொலை தான் ஒரே தீர்வு என முடிவெடுத்தார் அவர்.

1997ல் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் ஒரு தொலைக்காட்சி சேனலின் உரிமையாளர் அவர்.
மிகவும் வசதியானவர்.

தமிழ்நாட்டில் சேலம் நகரை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

டிவி சேனலில் வேலை செய்த யாரோ சிலரின் தவறான செயலால்….

சேனலின் ஓனர் என்பதால் இவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி.

உயிரையே விடத் துணிந்தார்.

அந்த நொடி…!

வாட்ச், தங்கசெயின் பிரேஸ்லெட் அனைத்தையும் கழற்றி எறிந்தார்.

பேன்ட் பாக்கெட்டில் இருந்த பர்ஸை விரக்தியில் எறிந்தார்.

நானே சாகப்போகிறேன்.
இதெல்லாம் எதற்கு…?

சட்டை பாக்கெட்டில் உள்ளவற்றை எடுத்து எறிய முயற்சி செய்த போது….,

_அந்தப் படம் அவர் கண்களில் பட்டது._

இது என்ன படம் என பார்க்க…,

அது ஒருமுறை அவருடன் விமானத்தில் பயணித்த தமிழர் ஒருவர் அவருக்கு கொடுத்த…,

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவின் பாக்கெட் சைஸ் படம்.

சக்திவாய்ந்த தெய்வம் எப்பவும் பத்திரமாக வச்சுக்கங்க’ன்னு எப்பவோ கொடுத்தது.

அந்த படம் முன்பக்கம் கருவறை.
பின் பக்கம் திருப்ப…,

படத்தில் இருந்த அடிகளார்
_என் ஆலயத்துக்கு கிளம்பி வாடா.._
என அழைத்து போல இருந்தது.

_படம் பேசுகிறதா…..?_

ஒரு நொடியில் திடுக்கிட்டு, பித்து பிடித்தாற்போல உணர்ந்தார்.

_செத்துவிடலாம் என நினைத்தவரின் மனநிலையில் புதுமாற்றம்._

சிறிது நேரத்தில் கிளம்பி ஏர்போர்ட் வந்து சென்னைக்கு கிளம்ப தயாரானார்.

சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி..,

அந்த பாக்கெட் போட்டாவை காட்டி இந்த கோவிலுக்கு போக வழிகேட்க,

ஒரு டாக்ஸி பிடித்து மேல்மருவத்தூர் வந்தடைந்தார்.

ஆலயத்தில் அருட்கூடத்தின் வாயிலில் பாதுகாப்பு தொண்டரிடம் அடிகளாரை பார்க்கனும் என கேட்க…,

அவர் வழிமுறைகளை சொல்ல…

உள்ளே சென்று அடிகளாரின் பாதத்தில் விழுந்து கதறினார்.

ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் கூறியது:

நான் தான்டா இங்கு உன்னை வரவைத்தேன்.

உன் உயிரை காப்பாற்றத்தான் நானே வந்தேன்.

எவனோ செஞ்ச தப்புக்கு நீ ஏன் சாகப்போகிறாய்…?

நீ அங்கே இருந்தால் உன் உயிருக்கும் ஆபத்து.

உன் சொத்துக்கும் ஆபத்து.

உன் சொத்தை அபகரிக்க ஒரு கூட்டம் சதி செய்யுது.

உன்னை காப்பாற்றவே இங்கு வரவழைத்தேன்.

இன்றிலிருந்து மூன்று நாட்கள் இந்தமண்ணை விட்டு எங்கும் போகாதே….!!

உன் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்து தருகிறேன்..!!

உன் முன்னோர்கள் செய்த தர்மத்தினால் தான்…,

உன்னை தேடிவந்து காப்பாற்றினேன்…!!

நீ செய்த தர்மமே இன்று உன்னை காப்பாற்றியது.

ஆலயத்தில் உன்னால் முடிந்த தொண்டுகளை செய்…!!

என கருணையோடு அருள்திரு அம்மா அருள்பாலித்தார்.

என்றோ என் முன்னோர் செய்த புண்ணியம் இன்று என்னை இந்த மண்ணுக்கு வரவழைத்ததா…?

அதுவும் அடிகளாரின் படம் என் ஆலயத்திற்கு கிளம்பி வாடா என அழைத்தது…

இங்கு அடிகளார் நடந்தது எல்லாம் எடுத்துக் கூறியது…

நினைக்க , நினைக்க மலைப்பாகி ..,
கண்ணீர் மல்க வெளியே வந்ததார் அந்த அன்பர்….,

அந்த மூன்று நாட்களில் லண்டன் போலீஸ் அவரின் ஆபிஸில் அவரை தேடி விசாரிக்க…

கிடுக்குப்பிடி விசாரணையில் தவறு செய்த ஊழியர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

டிவி சேனலை ஏமாற்றி மிரட்டி எழுதி வாங்க திட்டம் தீட்டியது என ஏகப்பட்ட சதி வேலைகள் அம்பலமானது.

அந்த அன்பரின் தலை தப்பியது.
டிவி சேனலும் தப்பியது.

அவர் அம்மாவிடம் உத்தரவு பெற்று லண்டன் சென்றார்.

✳இதுபோன்ற அற்புதங்கள் கலியுகத்தில் நடக்குமா..?

✳என்றோ முன்னோர்கள் செய்த தர்மம்.

✳இன்று தன் உயிரை மாய்க்க இருந்த ஒரு அன்பரை காப்பாற்றுமா…?

மருவத்தூரில் அவதரித்த பங்காரு தெய்வம்..,

ஆலயத்தை பற்றியே எதுவும் தெரியாத ஒரு அன்பரை நாடுகள் கடந்து,

அவன் சாகத்துணியும் வேளையில் ..

படத்தில் இருந்து பேசி வரவழைத்து காக்கிறார் என்றால்…,

அவர் என்ன சாதாரணமாவரா..?
மகானா……?
அவதாரமா….?
இல்லை கடவுளா..?

இப்படியும் ஒரு சித்தாடலா…?

இந்த மரமண்டைக்கு எதுவும் புரியவில்லை .

ஒன்று மட்டும் நன்றாக தெரிகிறது.

அடிகளார் பாதத்தை பிடிச்சுகிட்டா போதும்..

அடிகளார் என்ன சொல்லறாங்களோ அதை அப்படியே செஞ்சுட்டா போதும்.

வேற தவறான வழியில் போகவிடாமல்…

நம்மை நிச்சயம் காப்பாற்றி கரையேற்றி விடுவார் என்பது மட்டும் சத்தியம்.

ஓம்சக்தி அம்மாவே சரணம்
?????????