மருவூரார்!

மருவத்தூர் மகானே! 
உனை காணாமல் 
என்னால் இருக்க 
முடியவில்லை! 
உனை எண்ணாது
நெஞ்சு துடிக்க
முடிவதில்லை!

உன்னிடம் வந்த..
ஒவ்வொரு நொடியும்..
உன்னதமான 
நினைவலையில்
ஒவ்வொரு நாளும்
விடியும்!
மவுனத்தில் 
இருந்தாலும்
மகத்தான நாடகம்..என
மறுபடிதானே புரியும்!
அவரவர்க்கு தகுந்த 
ஆன்மீக பாதையை..
அள்ளி தந்தாயே..
அனுபவம்தானே 
அறியும்!

எந்த கோயிலில் …
எங்கு சென்றாலும். .
உந்தன் பெயரையே..
சொல்லி வணங்குவதே
எந்தன் மனதினில்
பதியும்!

பாசமே… கிடைக்காத
பரிதவித்த நெஞ்சுக்கு..
பாசத்தை 
ஊட்டி விட்டாய்!
இரும்பினை ஈர்க்கும்
காந்தமாய் … எம்மை
ஈர்த்துனை 
ஆட்சி கொண்டாய்!
இதயத்தில் வேண்டி..
இதமாக கேட்போர்க்கு..
.. ஆதி
சக்தியாய் 
காட்சி தந்தாய்!

தேவாதி தேவனே..
உனை எண்ணாது 
நெஞ்சு துடிக்க. .
முடிவதில்லை! ??

…சபா ஸ்ரீமுஷ்ணம் ..