காணுக! காணுக! பூதலத்தில் பிறப்பு கொண்ட மானிடர் குலமே!! காணிடுமித் திருவடியில் தான் அனைத்து கோடி புவனங்களும் உட்கார்ந்து சுற்றி சுழன்று கொண்டு இருக்குது!!*

*நம்ப முடியாத பல பல விசித்திரமாண அண்ட கோடி உலகங்கள் வான் வெளியில் சுழன்றாடுவதுக்கு மைய இடம் ஒன்றுண்டானால் அது பரம மருவூரானின் திருவடியே !!*

*பல கோடி உலகமெலாம் ஆன்மா சஞ்சரிக்கும் தவிப்பாக ஆனாலும், அவ்வான்மா தங்குமிடம் மரூவூரானின் திருவடிதான்!!*

*சடைமுடி தரித்து பர்வதமதில் ஞானயோகம் பல ஆயிரம் கற்றிடினும் இத்திருவடியை காணுமின்பத்துக்கு இணையாகாதப்பா!!*

*வாழும் வாழ்விலே சொற்ப நாள் தான்!சூக்குமமாய் சுற்றுவது பல கல்பமென்று இப்போது உணரு! அதற்கு இதுவே தருணமே!*

*அதற்கு இவ்வண்ட கோடி உலகிலே அத்திமர பூ போல உருக்கொண்ட பரம்பொருளின் திருவடியில் உன் தலை வைத்து ஆனந்தம் அடைந்து நில்லு!!*

*வினைத் தொடர்பு சங்கமத்தின் விதியெலாம் தன்னிலை உணர்வு கண்டு அதனதன் வழி போகும்! மெய்தனை உணர உணர அங்கே இம் மருவூரானின்றி வேறு யாருமில்லை!!*

*தணல் வழி போய் நதிதீரமென்று அங்கும் மாயை மையமிட்டு நிற்கும்!! ஆனாலும் மானுடர் குலமே! இப்பரம திருவடியே மெய்யெனக் கொண்டு நீ அங்கு நிற்கையிலே, அங்கேயும் பரம திருவடியாய் உனக்கு காட்டி, எங்கும் பரம மரூவூரானந்தங் காண்பாயே!!!!*

*அம்மாவின் தொண்டன்
கா.சுப்ரமணியம்