ஒரே தாய்! ஒரே குலம்!!
இந்த அருள்வாக்கை நாம் வாழ்வில் திரும்பத் திரும்ப படிக்க வேண்டியது அவசியம்..
*”வீடுபேறு அடைய (முக்தி பெற)”*.————————————
*நீயும் தாயான என்னிடம் வந்துவிடு! யுகம் யுகமாக என்னைப் பிரிந்து தவித்தபடி அலைகிறாய் தாய் வந்திருக்கிறேன்*
*உனக்கு ஒரு சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கி அழைக்கிறேன். வந்துவிடு! பெற்ற மனம் பித்து ! பிள்ளை மனம் கல்லு! என்பது உங்களுக்கு மட்டும்தானா? எனக்கும் அப்படித்தான்.*
*அதனால்தான் மனம்பொறுக்காமல் என்னிடம் வந்துவிட்ட பிள்ளைகளை வைத்து உன்னை ஈர்க்க இதுபோன்ற செயல்களை உலகுக்குக் காட்டுகிறேன்.*
*ஒன்றைமட்டும் நெஞ்சில் பதித்துக் கொள்!*
*எனது மேலான இருப்பை விட்டு – உனக்காக – உலக அழிவைத் தணிக்கும் பொருட்டு நானாக இறங்கி வந்திருக்கிறேன்.*
*இப்போது என்னை அலட்சியப் படுத்திவிட்டு அப்புறம் நான் ஓங்காரத்தில் ஒடுங்கிவிட்ட பிறகு நீ என்ன முயன்றாலும் இப்போது கிடைக்கிற வாய்ப்பு, அனுபவம் உனக்குக் கிடைக்காது!*
*நான் அவனுக்கும் தாய்! உனக்கும் தாய்!*
*உன்னுடைய வினை முடிச்சும் வினைப் பாரமும் என்னிடம் வர முடியாதபடித் தடைபடுத்துகின்றன.*
*என் தொண்டர்களை வைத்துப் பாமர மக்களை வலிய வரவைத்து ஒரு பலனைக் கொடுத்து அனுப்பி வைக்கிறேன்.*
*ஆன்மிக ஜோதி, ஆன்மிகப் பயணம், ஆன்மிக மாநாடு, இருமுடி, அங்கவலம், வார வழிபாட்டு மன்றம் எல்லாமே… உன்னை என்னிடம் சேர்த்துக் கொள்ள வேண்டி உன் பொருட்டு நான் உருவாக்கிக் கொடுக்கும் சந்தர்ப்பங்கள்.*
*புத்தியோடு வந்து பிழைத்துக் கொள்! அம்மாவிடம் வந்து ஒட்டிக் கொள்!*
*என் மடியில் வந்து விழுந்தபின் அடிப்பேன்; அணைப்பேன், என்னை விட்டு அகலக் கூடாது.*
*அகங்காரமும், மண்டைக்கனமும் இல்லாதவரை இந்தத் தாயின் மடியில் நிரந்தரமாக இருக்கலாம்.*
*அவை தலைக்கேறி விட்டாலோ ….*
*ஒன்று நான் உதறி விடுவேன்…*
*இல்லையேல் நீ உதறி விழுந்து அப்பாலே கிடப்பாய்.*
*இதுவே ஆன்மிக உலகில் நான் ஏற்படுத்தியுள்ள எழுதப்படாத சட்டம்.*
–அன்னையின் அருள்வாக்கு.
குருவடி சரணம். திருவடி சரணம்.