மறுபடி மறுபடி ஜனனம் – இந்த மானிட வாழ்வில் சலனம்
அம்மா உந்தன் அங்கம் விதி மாற்றிட மண்ணதில் உருளும்

எதை நினைத்ததோ உனது நெஞ்சம் …
தரையில் வேகமாக தேகம் உருண்டதே

பதை பதைத்ததே எனது நெஞ்சம் 
அருமைத்தாயின் ஞான தேகம் சிவந்ததே

நீ உருள்வதால் இருவிழி கலங்குதே என்னுயிர் அம்மா…….

ஆதிசக்தி பயணம் குருபால நாக ஜனனம் 
பாலன் உருண்ட சமயம் இந்த பூமி கூட கதறும்

நீ நடந்து போகும் போதே கதறுகின்ற உள்ளம் 
அங்கம் புரண்டு போகும் போது அட என்னவாகிப் போகும் !!!

மெய்சிலிர்க்கக் கண்டேன் உனைக் கைவலிக்கத் தொழுதேன் 
நீ அங்கம் புரண்ட தடமே வைகுண்டப் பாதையென்பேன் ..

அன்று செய்த வினை 
இன்று வந்து – எனை
நின்று கேள்விதனைக் கேட்ட போது – உனைத்தஞ்சம்
என்றவுடன் அங்கம் புரண்டு வந்ததோ ……………

நாகமான உடம்பா குரு நாதமான உடம்பா 
இதை யாரு சொல்லக் கூடும் 
அறியாதோ அன்னை தேகம்

ஆறு போல ஓடும் உன் அங்கம் கூறும் பாடம் –
செய்திடாதே பாவம் எனச் சொல்லிப் பாவம் தாங்கும்

தங்கப் புதையல் கண்டால் உடன் பங்கு கேட்கும் உலகம்
உன் அங்கம் ஏந்தும் துயரம் இதைப் பங்கு போட வருமோ …………

ஊருக்காக.. பல உயிருக்காக.. வலியோருக்காக.. சம நீதிக்காக.. 
பொன் மேனி நோக உன் அங்கம் புரண்டு வந்ததோ