*”1978 ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் வெள்ளியன்று நடந்த நிகழ்ச்சி”……..!!!*

சென்னையிலிருந்து,
” பல ஆலயங்களைத் தரிசிக்க வேண்டிப் பெண்கள் சிலர் மேல்மருவத்தூர் வந்தனர்”…..!!

அப்போதைய சித்தர் பீடம் அவ்வளவு கட்டமைப்புகள் கொண்டதாக இல்லை…..!!

கருவறை மண்டபத்தின் எதிரே ஒரு இரும்பு தகட்டால் வேயப்பட்ட கூரை……!!

“புற்று மண்டபத்தின் மேலே ஒரு கூரை”…..!!

அவ்வளவுதான்….!!
“ஆலயத்தின் அமைப்பு”.

அந்த பெண்களும், தாடிக்காரர் ஒருவரும், அவருடன் தமிழிப்பேராசிரியர் மற்றொருவர் என…..,

” மூவர் மேல்மருவத்தூர் பற்றிக் கேள்விப்பட்டு வந்தனர்”…..!!

அப்போது…..,
‘ ஆச்சரியப்பீட நாயகர்’ ‘ஆன்மிககுரு’.” அருள்திரு அம்மா “,
அருள்நிலையில் சுயம்பின் அருகில் நின்ற நேரம்.

அந்த தாடிக்காரரை அழைத்து வருமாறு அன்னை ஆதிபராசக்தி ஒரு தொண்டருக்கு ஆணையிட்டாள்.

தாடிக்காரருடன் வந்த மற்ற இருவரையும் அன்னை அழைத்தாள்.

இருவரும் அன்னை எதிரே கருவறையில் நின்றனர்.

” என் கையில் எதுவுமில்லை பார்த்துக்கொண்டாயா…….?”

என்று தன் கையைத் திறந்து காண்பித்து……,

“கையில் வேப்பிலையுடன் வெளியே வந்தாள்”….!!

அன்னையை தரிசிக்க அந்தக் கருவறை மண்டபத்தில்…….,

ஆண்கள் வரிசையும் , மகளிர் வரிசையும்

எதிரெதிரே தனித்தனியாக நின்ற வண்ணம் இருந்தனர்….!!

அன்னை இடைவெளி இருந்த இடத்தில் நின்றாள்….!!

தன் கையிலிருந்து ,

“மூன்று வேப்பிலைகளைக் கிள்ளிப் போட்டாள்”…..!!!

உடனிருந்து பார்த்த பக்தர்கள் எதிரே…..,

அந்த மூன்று வேப்பிலைகளும்,

“தரையில் விழுந்தவுடன் அப்படியே மஞ்சள் நிறத் தகடுகளாய் மாறின”….!!

“பின் தாமே சுருண்டன”…..!!

எல்லாரும் பார்க்க……,

” இப்போது தரையில் மூன்று தங்க மாங்கல்யங்களாக மாறின”……!!!

“அந்த அற்புதத்தை கண்டதும்”,

அங்கிருந்த பக்தர்கள் …..,

” ஓம் சக்தி! பராசக்தி” என்று சொல்ல சொல்ல……,

” அன்னை ஆதிபராசக்தியின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வந்தது”……!!

அக்கண்ணீரோடு,

” மெல்ல சுயம்புவின் அருகில் சென்று நின்றாள்”……!!

தொண்டர் ஒருவர்….,

அம்மா….!

“நீங்கள் ஏம்மா அழுகிறீர்கள்”……?
என்று கேட்டார்…..

“கேவலம் தங்கத்தை பார்த்துத் தானே மகனே”
” ஓம் சக்தி பராசக்தி கூட வருகிறது”…..,

என்று சொல்லி,

தன் நெஞ்சைக்காட்டி ……,

” இவ்விடத்திலிருந்து வரவில்லையே”…….?

என்று கண்ணீர் மல்கக் கூறினாள் அன்னை……..!!

இது போன்ற வித்தை எல்லாம்……..,

” என்னை அறியாதவர்களுக்கு நான் செய்து காட்டத் தேவையில்லை மகனே”…….!!

என்றாலும் பாமரர்களும் அன்னையின் திருவடி பற்றிக் கொள்ள……,

“இதைச் செய்து காட்ட வேண்டியுள்ளது மகனை…!!” என்றாள் அன்னை ஆதிபராசக்தி………!!

*பக்கம்: 258-260.*

*மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம். தல வரலாறு. பாகம்-1.*