தங்களது நெருங்கிய சொந்தங்கள் மரணமடைந்து விட்டால்….,
அது வரை கோயிலுக்குச் சென்று பக்தியோடு வழிபட்டவர்கள்….,
“இந்தச் சாமி காப்பாற்றவில்லை”…….,
இனி நான்,
இந்தக் கோயிலுக்கு போக மாட்டேன்…..,
அந்தச் சாமியையும் கும்பிட மாட்டேன்…..
என்று ஒதுங்கிக் கொள்வார்கள்….!!
அதுவரை வழிபட்டு வந்த தெய்வப் படங்களைத் தூக்கிப் பரண் மேலே போட்டு விடுவார்கள்….!!
மனிதர்களில் இப்படி ஒரு ரகம் உண்டு…..!!
கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் சாமி…..!!
கேட்டதைக் கொடுக்க வில்லை என்றால்….. ,
இந்தச் சாமிக்குச் சக்தி இல்லை…..?
இப்படி ஒரு ரகம் உண்டு…..!!
“ஓம் மறுப்பன செய்யினும் வாழ்த்துவம் போற்றி ஓம்”…!!
?1008 போற்றி மலர்கள் மந்திர விளக்கம்?
தங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் நிறைவேற்றினால் தான்….,
அது சாமி…… !
அதற்குத்தான் சக்தி… !
என்று நினைப்பவர்கள் உண்டு….!!
“இது சக்தி உள்ள சாமி…..!
என்று எல்லோரும் சொல்கிறார்கள்….!!
நம் கோரிக்கையை இது நிறைவேற்றுகிறதா பார்க்கலாம் என்று,
இந்தக் கோயிலுக்கு வருகிறேன்” என்று…..,
அரைகுறை நம்பிக்கையோடு வருபவர்கள் ஒரு ரகம்….!!
“தனது மனக்குறையைத் தீரக்க வில்லை என்றால்,
தன் விதியை நொந்து கொள்ள வேண்டுமே தவிர….,
தெய்வத்தை நொந்து கொள்ளக் கூடாது….,
“அந்த தெய்வத்தை நிந்திக்கக் கூடாது”….!!
அது பாவம்….!!
என்று “இறை அனுபவம் பெற்ற பெரியோர்கள் சொல்கிறார்கள்”…..!!
{1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் -245 + 246 }