சைவ சமயத்தைப் பரப்பிய ஆசாரியர்கள் நால்வர்.
1. திருஞான சம்மந்தர்,
2. திருநாவுக்கரசர்,
3. சுந்தரர்,
4. மாணிக்க வாசகர்.
இவருள் மாணிக்க வாசகர் சன்மார்க்கம் போதித்தவர்; பக்தி முதிரப் பெற்று, ஞானியானவர். சிவபெருமானே குருவாக வந்து, அவரை ஆட்கொண்டான் என்பது வரலாறு. மாணிக்க வாசகர் என்பது இறைவனே கொடுத்த பெயர். அவரது இயற்பெயர் வாதவூரார்.
வாதவூரார் பாண்டிய நாட்டு மன்னன் ஒருவனிடம் மந்திரியாக இருந்தார். மன்னனின் குதிரைப் படைக்குப் புதிய குதிரைகள் தேவைப்பட்டன. அவற்றை வாங்கி வருமாறு, பாண்டிய மன்னன் பொருள் கொடுத்து அனுப்பிவைத்தான்.
கிழக்குக் கடற்கரையில் குதிரைகள் வந்து இறங்குவதாகக் கேள்விபட்டு, வதவூரார் அங்கே சென்றார். செல்லும் வழியில் திருப்பெருந்துறை என்ற ஊரில் சென்றபோது, *சிவோகம்* ஒலிப்பதைக் கேட்டார். கேட்ட வழியே நடந்து சென்றார்.
அங்கே ஒரு சோலையின் நடுவில், குருந்த மரத்தின் நிழலில், சிவபெருமானே ஒரு அந்தணர் வடிவத்தில், சீடர்கள் சிலருக்குப் பாடம் நடத்தியதைக் கண்டார்.
அந்த அந்தணரை வணங்கி, “ஐயனே! உங்கள் கையில் வைத்துள்ள சுவடி, என்ன சுவடி ? என்று கேட்டார். இது சிவஞான போதம் என்றார் குரு.
சிவம் என்பது யாது? ஞானம் என்றால் என்ன ? போதம் என்பது எது ? – என்று கேட்டார் வாதவூரார்.
சிவனே மெய்ப் பொருள் அவனே பரம் பொருள்!”
“ஞானம் என்பது அந்த மெய்ப்பொருளை, உள்ளூணர்வால் அறிவது!”
“போதம் என்பது, அந்த ஞானத்தை அறிந்து தெளிவது!” – என்றார் குரு.
தன்னை ஆட்கொள்ள வேண்டியே, இறைவன் ஓர் அந்தணனாக வந்திருக்கிறான்- என உணர்ந்த வாதவூரார், இறைவனின் உபதேசங்களைக் கேட்டுத் தெளிந்து ஞானியானர்.
இறைவனது திருவடி தீட்சைப் பெற்றதால் தன் வசமிழந்து, தான் பெற்ற ஞான அனுபவங்களை எல்லாம் பாடல்களாகப் பாடினார் . அதுவே திருவாசகம்!
இறைவன் வேதம் கற்ற ஒரு அந்தணனாக வந்து, காட்டிய நெறியே ஞான நெறி மறையவன் கோலம் கொண்டு வந்து , காட்டிய நெறியே ஞான நெறி!
*ஆதலின் இம்மந்திரம் மறையோர் கோல நெறி என்று , ஞான நெறியைக் குறிப்பது.*
*சிவப் பெருமான் சகுணப் பிரம்மமாக வந்து, நிர்க்குணப் பிரம்மத்தை உணர்த்தினார்.*
*அந்த நிர்க்குணப் பிரம்மமாக இருப்பது எது ? ஆதிபராசக்தி !*
*ஈசுவரத் தத்துமாக இருப்பவன் சிவம்; அந்தத் தத்துவத்தைக் கடந்து இருப்பது ஆதிபராசக்தி!*
*சிவமும் சக்தியுமாகச் சேர்ந்தே, பிரம்மம் இயங்குகிறது. பரம சிவம் என்றாலும், அருட்பெருஞ்ஜோதி என்றாலும், எல்லாமுமாக இருப்பது அந்த ஒரு நிர்க்குணப் பிரம்மம் ஆகும்.*
*சக்தியின் வடிவு எது என்னில், தடையில்லா ஞானம் ஆகும்*
*எத்திறம் நிற்பான் ஈசன், அத்திறம் அவளும் நிற்பாள்” -எனச் சிவஞான சித்தியார் என்ற நூல் கூறும்.*
*ஞான நெறியாக விளங்குபவளும் அன்னை ஆதிபராசக்தியே! -என, இம்மந்திரம் போற்றுகிறது.*
1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் -513, 514.