“பணம் என்ன செய்யும்”…?
” பதவிதான் என்ன செய்யும்”..??
“பகை என்ன செய்யும்”…??
“பாவிதான் என்ன செய்வான்…???
” பங்காரு பாலகனின் பாதங்களை பற்றிக் கொண்டு….,
” பராசக்தி ஆலயத்தில் “…,
” தொண்டு செய்யும் அடியவனை”…..!!!
“விதி என்ன செய்யும்”….?
” வேதனைதான் என்ன செய்யும்”…??
” சதி என்ன செய்யும்”….??
“சதிகாரன் என்ன செய்வான்”…???
“மதியோடு மருவத்தூர் மண்ணினை மிதித்து வரும்”……..,
” அடியவனை சின்னவனை”…,
” அடிகளாரின் பக்தன் என்னை”…..!!!
” விதி என்ன செய்யும்”….???
அதிகாரம் என்ன செய்யும்….?
ஆதிக்கம் என்ன செய்யும்….??
ஆபத்து என்ன செய்யும்….?
ஆணவம் தான் என்ன செய்யும்…??
“அன்னையின் நாமத்தை”…..,
ஆவிக்குள் வைத்திருக்கும்….,
“அடியவனை சின்னவனை”….,
“அடிகளாரின் பக்தன் என்னை”…..!!
விதி என்ன செய்யும்…?
வேதனைதான் என்ன செய்யும்….??
சதி என்ன செய்யும்…?
சதிகாரன் என்ன செய்வான்…..???
புலவர். கனக பா.விஜயன்.