26/03/2019 அன்று நம் மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி கருணையோடு நம் தீராத பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொருவர் வீட்டிலும் திருஷ்டி கழிக்கும் முறையை அருளி உள்ளார்கள்.

மேல்மருவத்தூர் ஆலயத்தில் அறநிலையத்தில் திருஷ்டி தேங்காய் கொடுக்கப்படுகிறது.

#ஆலயத்தில்இருந்துவாங்கி #சென்றுதான்திருஷ்டிகழிக்கவேண்டும்

திருஷ்டி தேங்காய் அமைப்பு:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நார்ப்பகுதி அதிகமுள்ள தேங்காய்.

தேங்காயை சுற்றி ஒரு நாகம் படமெடுத்து நிற்க..,

நாகத்தின் தலை மேல் ஒரு திருஷ்டி உருவம்.

அதற்கு மேலே தேங்காய்நாருக்குள் புதைந்துள்ள எலுமிச்சை.

அன்னை அருளிய திருஷ்டி கழிக்கும் முறை:
???????????????
ஆலயத்தில் இருந்து….,
#உருவேற்றப்பட்ட_திருஷ்டி
#தேங்காயைவாங்கிசென்று

வீட்டின் நான்கு மூலைகளிலும் தேங்காயை வைத்து வணங்கி விட்டு..,

வீட்டின் முன்பகுதியில் நின்று..,
திருஷ்டி தேங்காயை வலது புறம் மூன்று முறை சுற்றி..

இடது புறமாக மூன்று முறை சுற்றி..,

{ வழக்கமாக அம்மா முறைப்படி திருஷ்டி சுற்றிவிட்டு }

எலுமிச்சை பழத்தை கையில் எடுத்துக் கொண்டு…,

தேங்காயை சிதறும்படி உடைத்துவிட வேண்டும்.

எலுமிச்சம்பழத்தை பூஜையறையில் விளக்கு போடுவதற்கு அறுத்து சாறு பிழிந்து சாறை ஒரு பாத்திரத்தில் வைத்து அன்னைக்கு படைக்கவும்.

#எலுமிச்சம்பழத்தில்தீபம்ஏற்றி
#பூஜைஅறையில்வைக்கவும்.

அன்னைக்கு படைத்த #எலுமிச்சம்பழச்சாற்றை_வீட்டில்
#உள்ளஅனைவரும்பிரசாதமாக
#உண்ணவேண்டும்.

நம் அன்னை அவ்வப்போது நடைபெறும் கிரகங்களின் மாற்றங்களுக்கு ஏற்ப…,

பக்தர்களை துன்பங்களில் இருந்து காக்கவும்….,

பின்னால் நடக்கப்போகும் பெருந்துயரங்களில் இருந்து மக்களை வரும்முன் காப்பதற்காகவும்…,

மேலும் நமது சிற்றறிவுக்கு எட்டாத எதிர்காலச் சிக்கலைத் தீர்ப்பதற்காகவும்…..,

இது போன்ற பலவகையான திருஷ்டி வழிபாட்டு முறைகளை பெருங்கருணையோடு அன்னை நமக்கு அருள்கிறாள்.

பக்தர்கள், பொதுமக்கள் கடைபிடித்து….

#அன்னை_ஆதிபராசக்தியின்
#பாதுகாப்புகவசத்தில்இணைந்து
#அருள்பெறுக….!!

“ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா”….!!