அடிகளாரின் தந்தை சக்தி திரு. கோபால நாயகர் அன்னை ஆதிபராசக்தியிடம் சென்று அருள்வாக்கு கேட்டார். “தாயே ! என் மகனுக்கு இப்போதே பல எதிர்ப்புகள் ! அடிக்கடி மந்திர வாதிகள் மறைமுகமாகத் தொல்லை கொடுக்கிறார்கள். ஆலயத்திலேயே தகடுகள் எழுதி வைத்தார்கள். இந்த நிலையில் என் மகனை கரிகோலத்துக்குத் தய்வுசெய்து அனுப்பி வைக்க வேண்டாம்” என்று முறையிட்டார். “நான் துனணயிருக்கிறபோது அடிகளார்க்கு எந்தத் தொல்லையும் வராது மகனே! கவலையை விடு ! “என்றாள் அன்னை ஆதிபராசக்தி. அன்னை ஆதிபராசக்தி சொல்லிய சமாதானம் சக்தி திரு. கோபால நாயகருக்கு திருப்தியாக இல்லை. “உனக்கென்ன? உலகத்து மக்களொல்லாம் உன் பிள்ளைகள். எனக்கு இவன்தானே தலைப்பிள்ளை…..? தயவுகாட்டு ! என மகனை அனுப்பதே! ” அன்னை ஆதிபராசக்தி மீண்டும் உறுதியளித்தாள். “அப்படியானால் கையில் அடித்து சத்தியம் பண்ணிக்கொடு ! “என்று கைநீட்டினார். சக்தி திரு. கோபால நாயகர். அன்று அந்தப் புற்றுமண்டபத்தில் அன்னை ஆதிபராசக்தியிடம் கைநீட்டிச் சத்தியம் வாங்கினார் கோபால நாயகர் என்றால், எந்த அளவுக்கு அவர் மனம் நொந்து போயிருக்கவேண்டும்? பக்கம்: 75-76. மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு.பாகம் -1.

]]>