அன்னை ஆதிபராசக்தி அமைத்த முதல் ஆலயக்குழு உறுப்பினர்கள் வருமாறு: 1. சக்தி திரு. கோபால நாயகர் 2. சக்தி திரு. சண்முகம் 3. சக்தி திரு.சிவப்பிரகாசம் 4. சக்தி திரு. விநாயகம் 5. சக்தி திரு. நாகாராசன் 6.சக்தி திரு. சுப்புராமன் 7. புலவர் சக்தி திரு. சொக்கலிங்கம் 8.புலவர் சக்தி திரு. முனிரத்தினம் ஆகியோர் முதல் ஆயக்குழுவினர். 1972 ஆம் ஆண்டு முதல் ஆடிப்பூரம் எளிய முறையில் அமைந்தது. அந்நாளில் கஞ்சி வழகங்கும் பொறுப்பு கோனேரிக்குப்பம் சக்தி திரு. இராசக்கவுணடர் என்கிற பக்தர்க்கு அன்னையால் வழங்கப்படது. 1973 முதல் நவராத்திரி விழா கொண்டாடுமாறு அன்னை பணித்தாள். இவ்வாண்டு ஆடிப்பூர விழாவில் தான் அன்னை ஆதிபராசக்தி முதன் முதலில் திருமேனியை வருத்திக்கொண்டு அங்கவலம் வந்தாள். 1974ஆம் ஆண்டு ஆடிப்பூரம்: அன்னை ஆதிபராசக்தியின் முதல் அங்கவலம் 1974ஆம் ஆண்டு ஆடிப்பூர விழாவில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் காசி யாத்திரை சென்று விட்ட காரணத்தால் அவர் இடத்தை வேறொருவைரக் கொண்டு நிரப்பலாமா என்று ஆலயக்குழுவினர் அன்னையை வேண்டினார். ” ஆடிப்பூரம் என்னுடைய நாள். அந்தநாளில் இங்கு வந்து விழாவைச் சிறப்பின்றவர்களுக்குச் சில தகுதிகள் வேண்டும். அவன் (திருமுருக கிருபானந்த வாரியார்) வித்தாயிருக்கும்போதே பக்தியோடு வந்தவன். அவனைத்தவிர வேறு யாருக்கும் அந்த தகுதி இல்லை. அவனுக்குப் பதில் நானே வந்து அருள்வாக்குத் தருகிறேன். வேப்பிலை மந்திரிப்பும் தருகிறேன்” என்று கூறிவிட்டாள் அன்னை ஆதிபராசக்தி. 1947ஆம் ஆண்டு ஆடிப்பூர விழாவிலும் அன்னை இந்த மண்ணுக்குத் தன் அருள் சக்தியைப் பாய்ச்சவும், இந்த மண்ணை மிதிப்பவர் பவாங்களைத் தானே ஈர்க்கவும் தன் திருமேனியை வருத்திக்கொண்டு அங்கவலம் வந்தாள். அந்த ஆடிப்பூர விழாவில் அன்னதானத்துடன் 21 பெண்களுக்குச் சேலையும், 20 ஆண்களுக்கு வேட்டியும், 10 மாணவர்களுக்கு சீருடையும் ஆடைதானமும் அளிக்கப்பட்டது. பக்கம்:52-53. மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-1.

]]>