‘‘குழந்தை அடித்தால் அழும், அது நொந்து அழுகின்றது. முன் வினையின் பாவம் இப்போது வருந்தி அனுபவிக்கின்றோம். எப்படி குழந்தை அடித்தபோது நொந்ததில் அழுததோ, அதைப்போல தீவினையின் பயனை வருந்தி அனுபவிக்கத்தான் வேண்டும். அதற்கு மருவத்தூர் வந்தால் என்ன பயன்? ‘‘மருவூர் மண்ணை மிதித்து ‘‘ஓம்சக்தி” எனச் சரணாகதி அடைந்தால் தீவினையின் பலனை நோகாமலேயே அனுபவிக்கும் ஆற்றலை உனக்குத் தருகின்றேன் மகனே” எனச் சொல்கின்றாள். ஏன்? தீவினைப் பயனை? இல்லாமலேயே, செய்ய இயலாதா அன்னையால்? அதையும் செய்கின்றாள், தேவை ஏற்படின். ஆனால் ஒரு சிலருக்கு மண்ணை மிதித்து சரணாகதி அடைந்தாலும், ‘‘வருந்தித்தான் அனுபவிக்கச் செய்கின்றேன்” என்கிறாள். இப்பெருமாட்டி இங்ஙனம் செய்வதற்குக் காரணத்தை விளக்குகிறாள். அவள் அதை அனுபவிச்சுட்டா அவனுக்கு பிறவிப்பயனைத் தருகின்றேன். அதாவது, ‘‘முக்திநிலை தந்து இனிப்பிறவி இல்லாமல் என்னோடு அணைக்கின்றேன்” என்பதே. ஏழ்மையைப்பற்றி: ‘‘ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு தெய்வத்திடம் இல்லை. ஏழையிடத்திலே பண்பு, பாசம் உண்டு, ஏழை, பணக்காரனைவிட பக்தியிலே உயர்ந்தவன்; ஏழை தெய்வத்தினும் உயர்ந்தவன் மகனே” தாயருள் பற்றி: ‘‘அடித்தால் அணைக்கிறேன்; அணைத்தால் அடிக்கிறேன்; அடித்து அணைக்கவில்லை எனில் அழிக்கின்றேன்” ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 3 (1982) பக்கம்: 48 .

]]>