989 ஆம் வருடம்
கோடைக்காலம். ஒருநாள் நான், என் மகன், பேரப் பிள்ளைகளுடன் மேல்மருவத்தூருக்கு அன்னையைத் தரிசிக்கச் சென்றோம். காலணிகளைப் பாதுகாக்கும் இடம் சென்று காலணிகளை ஒப்படைத்தோம். அப்போது அங்கே டேப் ரிக்கார்டரில் பாடிய பாடலொன்று என்னை ஆலயத்திற்குள் செல்ல முடியாதபடி தடுத்து நிறுத்திற்று. அந்தப் பாடலை மெய்மறந்து ரசித்து முடித்துவிட்டு ஆலயத்திற்குள் சென்றேன். ஆலயத்தை விட்டுப் புறப்படும்போது அந்தப் பாட்டின் வரிகள் மறந்து போய்விட்டன.
அதன் பின் கடலூரில் உள்ள அம்மாவின் தொண்டா் ஒருவா் வீட்டிற்குச் செல்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அங்கே மருவத்தூரில் நான் கேட்ட அதே பாடல் டேப் ரிக்கார்டரில் ஒலித்துக் கொண்டிருந்தது. “இந்தக் கேசட்டை விலைக்கு வாங்கவேண்டும் என்று நினைத்தேன். ஏனோ அவசரத்தில் புறப்பட்டு வந்துவிட்டேன் என்று சொல்லியபடி சோபாவில் அமா்ந்து மெய்மறந்து ரசித்தேன்.
சரி! இந்தக் கேசட்டை எடுத்துக் கொண்டு சென்று ஆசைதீரக் கேட்டுவிட்டு, சொந்தமாக கேசட்டு வாங்கியபிறகு திருப்பிக் கொடுத்தால் போதும்” என்று கூறியபடி அந்தக் கேசட்டை அந்த வீட்டார்கள் கொடுத்து விட்டார்கள். என்னைக் கவா்ந்த அந்தப் பாடல் அந்தக் கேசட்டில் இருந்தது. அது என்ன பாடல் தெரியுமா? “அடிகளாரின் சிரிப்பினிலே ஆயிரம் பூமலரும்” என்று தொடங்கும் பாட்டு. “மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு” என்ற வண்டிக்காரன் பாடலை என் பேரன் பேத்திகள் விரும்பி ரசிப்பார்கள்.
1991 ஆம் ஆண்டு ஒருநாள் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவிற்காகக் குடும்பத்தோடு புறப்பட்டோம். புறப்பட்ட நேரம் விடியற்காலை 3.00 மணி. வேனில் (Van) போகிறபடியால் நடுவே போட்டுக் கேட்கலாம் என்று கருதி அந்தப் பாடல் கேசட்டையும் பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். அந்த
விடியற்காலை நேரம் நல்ல இருட்டு. தாங்க முடியாத குளிர் வேறு! வண்டியின் ஜன்னல் கதவுகளை மூடிக் கொண்டோம்.
பயணத்தின்போது எல்லோரும் தூங்கி வழிய ஆரம்பித்தார்கள். நான் குளித்துவிட்டுப் புறப்பட்டதால் புத்துணா்ச்சியுடன் இருந்தேன். எனக்குத் தூக்கம் வரவில்லை. வண்டி அந்த அமைதியான விடியற்காலை இருட்டில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. என் மனமும் வாயும் அம்மாவின் மூலமந்திரம், 108 போற்றி, சக்தி கவசம் இவற்றை ஜெபித்துக் கொண்டு வந்தன.
அந்த வண்டியின் டிரைவா் சினிமா பாடல் கேசட்டைப் போட்டுக்கொண்டு ரசித்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். அந்தச் சினிமாப் பாடல்களின் சப்தம் அம்மா மந்திரத்தை ஜெபித்து வருவதற்கு இடையூறாக இருந்தது. என் பேரனை எழுப்பி, அவனிடம் அம்மா பாடல் அடங்கிய கேசட்டைக் கொடுத்து அதைப் போடும்படிச் சொன்னேன்.
டிரைவா் சற்றுநேரம் கழித்து அம்மா பாடல் அடங்கிய கேசட்டைப் போட்டார். பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின. அரைத் தூக்கத்தில் இருந்தவா்களெல்லாம் இப்போது விழித்துக்கொண்டார்கள்.
“அடிகளாரின் சிரிப்பினிலே ஆயிரம் பூமலரும்” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கிற்று. அவ்வளவுதான்! அடுத்த பத்து நிமிடம் கழித்து எங்கள் வேனுக்குள் (Van) பன்னீா், அத்தா், ரோஜா, கலந்த அற்புதமான சந்தன மணம் வீச ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக மணம் அதிகரித்தது. நாங்கள் ஒருவா் முகத்தை ஒருவா் பார்த்துக் கொண்டோம். எங்கள் வண்டியில் இப்படியொரு அற்புத மணம் வருவதற்கான பொருள் எதுவுமே இல்லை.
என் பேரன்கள் என் காதின் அருகில் வந்து, “பாட்டி அற்புதமான வாசனையை வீசுகிறதே கவனித்தீா்களா? என்று கிசுகிசுத்தார்கள்.
“அடிகளார் பாடல்கள் ஒலிக்கின்றதே……… அம்மா இப்போது நம் பக்கத்திலேயே
இருக்கிறார்கள். நம் கூடவே துணையாக வருகிறார்கள்” என்று ஆனந்தக் கண்ணீா் மல்கப் பரவசப்பட்டுச் சொன்னேன். நாங்கள் யாவரும் பக்திப் பரவசத்துடன் ஓம் சக்தி! ஓம் சக்தி! என்று மனதில் முணுமுணுத்துக் கொண்டு வந்தோம். கேசட்டில் இருந்த பாடல்கள் நிறைவுற்றன. எங்கள் வண்டியின் டிரைவா் ஒரு முஸ்லிம்! அவருக்கு இந்தப் பக்திப் பாடல் பிடிக்கவில்லை போலிருக்கிறது. எனவே அவருக்குப் பிடித்தமான இந்திப் பாடல்கள் கேசட்டைப் போட்டுவிட்டார்.
அதன் பின் படிப்படியாக அந்தச் சந்தன மணம் குறைய ஆரம்பித்துவிட்டது. அந்த மணத்தின் மயக்கத்திலேயே நாங்கள் ஊா் போய்ச் சோ்ந்தோம். எங்கள் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை அன்னை நடத்தியிருக்கிறாள்; அவற்றள் இது ஒன்று!
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. ஜெயலட்சுமி, கடலூர்.
அவதார புருஷா் அடிகளார், பாகம் 13, (பக்கம் 59 – 61)