3.“வெளியே தெரியாமல் தருமம் செய்வதே உண்மையான தருமம். அதுவே உண்மையான ஆன்மிகம்.” 4.“பிறர் செய்கிறார்களே என்பதற்காகவும், பிறர் சொல்கிறார்களே என்பதற்காகவும் தருமம் செய்யக் கூடாது. தானாக மனம் கனிந்து தருமம் செய்ய வேண்டும். பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்துத் தருமம் செய்யக் கூடாது.” 5. “எவன் எந்தத் துறையில் இருந்தாலும், எவன் ஒருவன் மற்றவர்களுக்கு உதவி செய்கின்றானோ அவன்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.” 6.“தருமம் செய்யாவிட்டால் எமதருமன் வருவான்.” 7.“பத்து ரூபாய் தருமம் செய்துவிட்டு உடனே நமக்குப் பலன் கிடைக்கவேண்டும் என்று நீங்களெல்லாம் நினைக்கிறீர்கள். அந்தப் பத்து ரூபாய் தருமம் செய்வதற்கு முன்பே பத்து வினைகள் உன்னிடம் திரண்டிருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.” அன்னையின் அருள்வாக்கு

]]>