மாபெரும் பஞ்சம் வருதற்குரிய காலத்தில் எந்த எந்த விண்மீன்கள் எந்த எந்தத் திக்கில் எவ்வாறு கூடும்? அவ்வாறு கூடினால் அதனால் நாட்டிற்கு விளையும் தீமைகள் யாவை ‘‘வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல் பன்னம் வாடிய பயனில் காலை” (புறம்.388)

மைம்மீன் புகையிலும், தூமம் தோன்றிலும் தென்திசை மருங்கில் வெள்ளி ஓடினும் (பு.று.177)

பழந்தமிழர் விஞ்ஞான அறிவின் எல்லைக்கு இதுவரைக் கூறியவை எடுத்துக்காட்டுக்களாகும். தமிழர்கள் பெற்றிருந்த இந்த விஞ்ஞான அறிவு ஏதோ ஒரு காலத்தில் தோன்றி மறைந்துவிட்ட ஒன்று அன்று.

தமிழினத்திற்குப் பொதுச் சொத்தாக இருந்த இந்த விஞ்ஞான ‘‘திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மன்மும் கரைந்துகக் கண்கள்” தொடுமணல் கேணியின் சுரந்து நீர்பாய அன்பர் ஆருநர்…….. ……… (நான் மாலை)

என்று கூறுகையில் ஓர் அனுபவ மெய்ஞ்ஞானியின் பாட்டில் ஒரு தமிழன் எவ்வாறு ஈடுபட்டான் என்பதை அறிய முடிகிறது. ‘‘திருவாசகத்தை ஒத்த எலும்பை என்பதைப் பின்வரும் புறப்பாடல் அறிவிக்கின்றது. இந்த அளவுக்கு உயர்ந்த வானியல் (astrhonomy) கற்றிருந்தார்கள் சங்கப்பாடல் பாடிய அறிஞர்கள் அறிவு தொடர்ந்து வளர்த்துவரலாயிற்று. திருவாசகம் பாடிய மணிவாசகப் பெருமான் ஒரு பெரிய மெய்ஞ்ஞானி என்பதில் யாருக்கும் ஐயம் வரப்போவதில்லை. திருவாசகம் என்ற நூல் கற்பவர் மனம் கல்லானாலும் உருக்கும் இயல்புடையது என்று கூறினார் சிவப்பிரகாச சுவாமிகள். உருக்கும் (Bone Melting) பாடலை உலகமொழிகள் எதிலும் காண முடியாது. என்று கூறினார் ரெவரண்ட் போப் ஐயர் என்ற கிறித்துவப் பாதிரியார்.

இத்துணைச் சிறந்ததும், உலகிலேயே இவ்வளவு சிறந்த பக்திப் பாடலைக் காணமுடியாது என்று பாதிரியார்களாலும் போற்றப்பட்டதும் ஆகிய திருவாசகத்தைப் பாடிய மெய்ஞ்ஞானியாகிய மாணிக்கவாசகரின் விஞ்ஞான அறிவு எவ்வளவு ஆழமானது என்பதையும் காண வேண்டும். விஞ்ஞானம் என்ற சொல்லைச் சரியாகக் கூறக்கூட முடியாமல் ‘‘விஜ்ஜானம்” என்று கூறும் நம்மூர்ப் பகுத்தறிவுவாதிகள், பாவம் ‘‘விஞ்ஞானி கண்டது மின்சாரம் பக்திமான் கண்டது பிரசாதம்” என்று எதுகை மோனைகளுடன் பேசிக்கொண்டு திரிகிறார்கள். இந்நாளில் நம் நாட்டில் வாழும் தமிழர்கள் அறிய வேண்டியது ஒன்று உண்டு. இந்நாட்டில் வாழ்ந்த மெய்ஞ்ஞானிகளில் பலர் மாபெரும் கல்வியாளர்கள். உதாரணமாக மாணிக்கவாசகர் ஒரு பெரிய அரசின் அமைச்சராக இருந்தவர் என்பதே சாலும். கையெழுத்து நாட்ட அறியாதவர்களும் தேர்தலுக்கு நின்று, தம்மை ஒத்த அறிவாளிகளின் வாக்குமையை மிகுதியாகப் பெற்றுவிட்ட ஒரே காரணத்தால் அமைச்சராக வந்து விடும் செயல் அறிவு வளர்ந்த இற்றைநாளில் காணப்பெறும் இயல்பு. இவர்கள் நினைப்பதுபோல ‘‘அறிவாளிகள்” குறைந்த அந்த நாட்களில், விமானமும் நீர்மூழ்கிக் கப்பலும் அறியப்படாத அந்த நாளில், வாக்குரிமை பெற்று யாரும் அமைச்சராக வந்ததில்லை. தம் கல்வி, அனுபவம் அறிவு என்ற இவற்றையே துணையாகக் கொண்டு அவர்கள் அமைச்சர் பதவியை அடைந்தனர். எனவே, மணிவாசகர் அவரே கூறுவது போன்று ‘‘கல்வி என்னும் பல்கடல் பிழைத்து” வந்தவர் என்பதில் என்னளவும் ஐயத்திற்கிடமில்லை.

அடுத்துக் காண வேண்டிய உண்மையும் ஒன்றுண்டு. விஞ்ஞான அறிவு மெல்லக் கடவுள் உணர்ச்சியை மாய்த்துவிடும் என்று நம்மில் பலரும் மனப்பால் குடிக்கிறோம். விஞ்ஞானத்தின் தந்தையராக விளங்கப் பேராசிரியர் ஆல்பர்ட் ஜன்ஸ்டீன், ராபர்ட் ஏ.மில்லிகன் போன்ற இரும்புத் தலையர்கள் அனைவரும் ஒப்பற்ற பக்திமான்களாக விளங்கியதோடு தற்கால விஞ்ஞானம் சமய வாழ்க்கைக்குப் பெரிய அரணாக விளங்குகிறதென்ற கருத்தும் உடையவர்கள். ஆனால், விஞ்ஞானம் என்ற சொல்லின் எழுத்தைக்கூடக் கூட்டத் தெரியாத நம் ஊர் அறிவுவாதி மட்டுமே ‘‘விஞ்ஞானம் சமயத்தையும் கடவுளையும் பொய்ப்பிக்கத் தோன்றிய மந்திரக்கோல்” என்று நினைக்கிறான்; வாய்கூசாது பேசுகிறான். இது நிற்க, நம் நாட்டில் பழங்காலத்தில் வாழ்ந்த மணிவாசகர் போன்ற பெரியவர்களும் அற்றை நான் அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் மேம்பட்ட முறையில் விஞ்ஞான அறிவைப் பெற்றுத் திகழ்ந்தனர். அவர்களுடைய இந்த அறிவு அவர்களுடைய பக்திக்கும் உருக்கத்திற்கும் தடையாக அமையவில்லை என்பது மட்டுமன்று, அரணாகவும் அமைந்ததை திருவாசகம் போன்ற நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன. மணிவாசகப் பெருமான் பெற்றிருந்த விஞ்ஞான அறிவு அவருடைய பக்திக்கு இடையூறாக அமையவில்லை. இதோ ஓர் உதாரணம். ‘‘திரு அண்டப் பகுதி” என்பது திருவாசகத்தில் உள்ள

‘‘அண்டப் பகுதியின் உண்மைப் பிறக்கம் அளப்பருத் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று தின்றஎழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரித்தன இல்நுழை கதிரின் துள்அனுப் புரையச் சிறிய ஆகப்பெரியோன்…..”

இப்பாடலின் பொருளைச் சற்று நின்று நிதானித்துக் காண்டல் வேண்டும். அண்டப் பகுதி என்பது (Universe) என்று நம்மால் கூறப்பெறும் அனைத்துப் பகுதியும் ஆகும். இந்த அண்டத்தில் உண்டைகள் பெருகிக்க காணப்படுகின்றன. இங்கு மெய்ஞ்ஞானியாகிய மணிவாசகர் உண்டை என்று கூறுவது பல்வேறு உலகங்களை உள்ளடக்கிய பால்வெளி (Milkyway) போன்றவற்றையாகும். இவற்றை விஞ்ஞானி (Galaxles) என்று கூறுகிறான். பிறக்கம் என்றால் பெருகுதல் என்பது பொருள், இந்த அண்டம், அதில் காணப்பெறும் உண்டைகள் என்ற இவற்றின் தன்மைகளை இற்றை நாள் விஞ்ஞானம் இன்னும் அறிய முடியவில்லை. இதனைத் தான் பெருமான் ‘‘அளப்பருத்தன்மை” என்று கூறுகிறார். விஞ்ஞானமும் தொலை நோக்காடியும் (Telescopes) மூன்றாவது அகவல். இப்பாடலினுக்கு விளக்கம் தர வந்த இடைக்காலப் பெரியோர்கள் ‘‘சிவனது தூல சூக்குமத்தை வியந்தது” என்று கூறினார்கள். இப்பாடலின் முதல் ஐந்து வரிகள் மட்டும் கீழே தரப்படுகின்றன.

வளர்ந்த இன்றும்கூட இவற்றின் தன்மையை அறிய முடியவில்லையா என்று யாரும் வியப்படைய வேண்டாம். அண்டத்தைப்பற்றி அறிவது ஒரு புறம் இருக்கட்டும். நம்முடைய சூரியக் குடும்பத்தில் ஒன்றான சனிக்கிரகத்தைக் கூட விஞ்ஞானம் நேற்றுவரையில் சரியாக அறிய முடியவில்லை. வாயேஜர் (Voyager I-II) என்ற ஏவுகணைகள் சனிக்கு அருகாமையில் சென்று படம் பிடித்து அனுப்பிய பிறகு, இதுவரைச் சனியைப் பற்றி விஞ்ஞானிகள் கொண்டிருந்த கருத்துக்கள் மாறத் தொடங்கிவிட்டன. நம் சூரிய குடும்பத்தின் உறுப்பாகிய சனியைப் பற்றியே சரியாகத் தெரியமுடியவில்லை என்றால் அண்டத்திலுள்ள உண்டைகளின் தன்மையை அறிவது எப்படி? இதனால் தான் மெய்ஞ்ஞானியாகிய மணிவாசகர் அளப்பதற்கரிய ‘‘தன்மை உடையன இவை” என்று கூறுகிறார்.

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 2 (1982) பக்கம்: 9-11  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here