இரண்டு லட்சம் பக்தர்கள் பங்கேற்ற ஈரோடு ஊர்வலம்(02-08-2009)

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் ஈரோடு மாவட்டக் கிளை சார்பாக ஈரோடு மாநகரில் 2.08.2009 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆன்மிக ஊா்வலத்தில் இரண்டு லட்சம் பக்தா்கள் பங்கேற்றனா். ஊா்வலத்தினை சூரம்பட்டி நாலுரோடு அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையிலிருந்து ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவா்கள் பார்வையிட்டார்கள்.



ஊா்வலத்தை சி.என்.சி கல்லுாரி அருகிலிருந்து மதியம் 3.15 மணிக்கு ஆதிபராசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் தாளாளா் சக்தி திரு.கோ.ப.செந்தில்குமார் அவா்கள் தொடக்கி வைத்தார். ஊா்வலத்தில் ஈரோடு மாநகராட்சி மேயா் சக்தி திரு.குமார்  முருகேஸ் கலந்து கொண்டார்.  

ஊா்வலத்தில் முன்னதாக நாதஸ்வரக் குழுவினரைத் தொடா்ந்து சக்திக் கொடிகளை ஏந்தியபடி சீருடையில் 1008 மகளிரும், 1008 இளைஞா்களும் வந்தனா்.மேலும் முளைப்பாலிகை, கலசம், விளக்குகள், கும்பங்கள், சீா்தட்டுக்கள் ஏந்திய படியும் பெண்கள் வந்தனா்.தொடா்ந்து பல்வேறு தொழில் செய்பவா்களும் சீருடையில் மாணவ மாணவியரும் பல்வேறு மன்ற பக்தா்கள் தங்கள் பெயா் தாங்கிய பேனா்களையும் எடுத்து வந்தனா்.

மேலும் கோலாட்டம், ஒயிலாட்டம், சலங்கை ஆட்டம், மற்றும் கொட்டு வாத்தியமும் பின்தொடர பல்வேறு வெளிமாவட்ட பக்தா்களும் தொடர ஊா்வலம் 4.20 மணிக்கு அம்மா அருளாசி மேடைக்கு வந்ததும் அவா்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.அம்மாவை மேடையில் கண்ட”ஓம் சக்கி பராசக்தி” என்றும் “அம்மா, அம்மா” என்றும் வணங்கிய படியே மேடையைக் கடந்தனா்.

ஈரோடு மாவட்டத் தலைவா் சக்தி முருகேஸ் உரையாற்றுகையில் தாம் அம்மாவை  சந்தித்து ஊா்வலம் நடைபெற அனுமதி கேட்டபொழுது மாவட்டத்தில் மழை இல்லாமல் வாடும் நிலையை கூறி முறையிட்ட போது தாமே ஈரோடு வருவதாகவும் அதற்குள் மேட்டூா் அணைக்குத் தண்ணீா் வரும்படி செய்து அணையிலிருந்து காவிரிநீா் வரும்படி செய்வதாக அம்மா கூறியதையும் அதன் படியே தற்போது நடந்துள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

தொடா்ந்து குடமுழுக்கு விழாவையும் மக்கள் நலப் பணிகளையும் அம்மா நடத்தி வைத்தார்கள்.தொடா்ந்து பக்தா்களின் இல்லங்களிலும் ஆதிபராசக்தி மன்றங்களிலும் பாதம் பதித்து அருளாசி வழங்கினார்கள். 

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here