எங்கள் குடும்பம் ஒரு தெய்வீக பாரம்பரியமிக்க குடும்பம். இதனை நான் பெருமைக்காகக் கூறவில்லை. பின்னே நான் கூறப்போகும் நிகழ்ச்சிக்கு இது சான்றாக அமையும். என் மூதாதையர்கள் பல தெய்வீகப் பணிகளைச் செய்தவர்கள். இந்த வழியில் வந்தவர்தான் என் தந்தை பல்கலைச் செல்வம் தெ.பொ.த. அவர் உயர்ந்தவர்; தெய்வீகமானவர்; அறிஞர்; தேசபக்தர். மொழியின் பால் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். பிற மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். பல சேவைகள் புரிந்தவர்.
எங்கள் குடும்பத்தினருக்கும் அவரது மாணவர்களுக்கும் அன்னையாய், தந்தையாய் குருவாய் நின்று காத்த தெய்வம் அவர், அவர் பிறர் நோகப் பேசி அறியாதவர். இருப்பினும் தன் கொள்கைகளை நிலைநாட்டிட இனிமையாகப் பேசி மற்றவர் மனத்தைக் கவருவார். எங்களுக்குத் தெய்வ வழிபாடு செய்யும் முறைகளும், தெய்வீக சிந்தனைகளும் கற்றுத் தந்தவர். எங்களுக்கு ஞான உபதேசம் செய்தவர். அவர் வழி நின்று, இன்று தெய்வ வழிபாட்டைத் தொடர்கின்றோம். பல அரிய அனுபவங்களை அவ்வப்போது அனுபவித்து வருகின்றோம். எங்கள் தந்தை எங்களைப் பல ஞானிகளிடத்தும், மகாரிஷிகளிடத்தும் அழைத்துச் சென்று, அவர்களது ஆசிகளை நாங்கள் பெறக் காரணமாய் இருந்தவர். பல சித்தர்கள் எங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு பல அதிசய சித்து விளையாட்டுகள் செய்து எங்களை உய்வித்து இருக்கின்றார்கள். அவர் எங்களைப் பல புண்ணியஸ்தலங்களுக்கு அழைத்துச் சென்று இருக்கின்றார்.
எங்கள் தந்தை பூஜை செய்யும்போது அவரிடம் ஒரு ஜோதியினைக் காண்போம். அவர் தியானத்தில் இருக்கும் போது வீடு முழுவதும் ஒருவித அமைதியும் தெய்வீகத் தன்மையும் காண முடியும்.
அன்னை ஆதிபராசக்தி ஆலயத்திற்கு 78-ம் ஆண்டு முதன் முதலாகச் சென்றார். அன்னை அவரிடம் பல சித்துக்கள் காட்டியிருக்கின்றாள். அன்னையை முழுவதும் உணர்ந்து அவருடன் இரண்டறக் கலக்க எண்ணிச் சென்றவர் இந்தச் சித்தி விளையாட்டால் சிறிது மனம் தளர்ந்து திரும்பினார். பின் அன்னையே மீண்டும் அவரை அழைத்து ‘’இந்தச் சித்து விளையாட்டு உனக்கல்ல” நீ எதனை நாடி வந்தாய் என்பது தெரியும். அவைகளை உனக்களித்து உன்னை மகானாக்கி என்னுடன் அழைத்துக் கொள்வேன் எனக் கூறினாள். சக்தியுகம் விரைவில் வியாபித்து உலகம் சுபிட்சம் அடையும் எனவும் கூறினாள். என் தந்தை பின்பற்றும் தியான முறையினையே மேற்கொண்டு பின்பற்றக் கூறி சில ஞான உபதேசங்களும் அளித்தாள்.
இவ்வாறு அன்னையாலே ஞான உபதேசம் பெறும் பேறு யாருக்குத்தான் கிட்டும்? அதன் பிறகு அவர் முற்றிலும் மாறிவிட்டார். ‘‘அவர் அவர்களுக்கு என்ன என்ன தேவையோ அதனை அளித்து வருபவன் மகாசத்தி. அவன் மிக உன்னத நிலையில் இருந்து அருள் வாக்கில் பேசுகின்றாள். என்ன கூறுகின்றாள் என எல்லோரும் விளங்காது. சிலர் அதிருப்தியுடன் வருகின்றார்கள். இது அன்னையின் தவறில்லை. அன்னை கூறுவதைக் கூர்ந்து கவனிக்காமல் விளங்காமல் வருவதால்தான் அவர்கள் அதிருப்தியுடன் வருகின்றார்கள். ஆனால் பின் நடப்பவைகளைப் பார்க்கும் போது இப்படித்தான் அன்று அன்னை கூறினாள் என்று திருப்தி அடைபவர்கள் பலர் இருக்கின்றார்கள் என அவர் அடிக்கடி கூறுவார்.
சில மாதங்களில் என் தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதும் மதுரையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தோம். நான் அன்னையைக் கண்டு தந்தை படும் துயரைக் கூறினேன். ‘‘அவன் பெரியமகான். அவள் பிறவி இத்துடன் முடிவடைகின்றது. எனவே அவள் இந்தத் துயரை கண்டிப்பாக அனுபவித்து அவள் பெரியமகான். அவள் பிறவி இத்துடன் முடிவடைகின்றது. எனவே அவள் இந்தத் துயரை கண்டிப்பாக அனுபவித்து அவன் பிறவியைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவனுக்கு அடுத்த பிறவி இல்லை. அவனுக்கு வந்திருப்பது புற்றுநோய்! விரைவில் குணமடைந்து நடப்பான். அவனை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள் எனக் கூறினாள். அவரைக் கவனித்த தேர்ச்சி பெற்ற டாக்டர்கள் ‘‘இது மிகவும் முற்றிய நிலை, எப்படி இந்த அளவுக்கு வளரவிட்டீர்”கள் என கேட்டனர். வலியைக் குறைத்து அவர் முடிவு வரும் வரை சிகிச்சை அளித்து வருவோம் எனக் கூறினார்கள்.
அன்று அடிகளார் சென்னை வந்து தந்தையைக் கண்டார். அவர்மேல் அன்னை வந்து ஏதோ என் தந்தைக்கு கூறினாள். பிறகு தந்தை கூறுவது போல் செய்யக் கூறி சென்றாள். உடனே அடையாற்றில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூறினார். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் உதவியுடன் பல சிரமங்கள் ஊடே அவரை அவர் கூறியது போல் எடுத்துச் சென்றோம். அங்குள்ள டாக்டர்கள் தந்தையைப் பரிசோதித்து விட்டு இது முற்றியநிலை. எதுவும் அதிசயம் நடக்கும் என எண்ண வேண்டாம். 99.9 பிழைப்பது கடினம். நெருங்கியவர்கள் அருகிலேயே இருங்கள். சிகிச்சை அளித்து வரவோம். நிச்சயமாக எதையும் கூறமுடியாது எனக் கண்டிப்பாக கூறிவிட்டார்.
அன்னையை பலமுறை வந்து கண்டு சென்றோம். ‘‘அவனுடன் தான் நான் இருக்கின்றேன் அவள் எழுந்து நடமாடுவான்” என கூறினாள். வலி அதிகமாக இருப்பதைக் கூறினேன். ‘’அவன் அதை அனுபவித்தே தீர வேண்டும். அதனைப் போக்க மாட்டேன்” என திட்டவட்டமாகக் கூறிவிட்டான். சிகிச்சை தொடர்ந்தது. சில மாதங்களில் தந்தை நல்ல உடல் நலம் பெற்று எழுந்து நடக்க ஆரம்பித்தார். எங்களுடன் நன்கு பேசி நல்ல முறையில் இருந்தார். மருத்துவமனையில் இனி இருக்க வேண்டாம் என டாக்டகுங் கூறி வீட்டிற்கு அனுப்பினர்.
இதனைத் தந்தையிடம் கூறினேன். அவர் டாக்டர் சாத்தாவிடம் ‘’அம்மா என்னை அன்னை உங்கள் மூலம் குணப்படுத்தி விட்டார்கள். நான் திருவாசகம் பற்றி சொற்பொழிவு செய்ய வேண்டும் அதற்கு நான் செல்லலாமா? எனக் கேட்டு அப்படியே சென்று சொற்பொழிவு ஆற்றினார். அவர் அந்த உரையின் போது, நான் முழு வாழ்வு வாழ்ந்து விட்டேன். அன்னை சில காலம் என்னை வாழ வைத்ததின் காரணம் அவள் தான் அறிவாள் என கூறினார்.
தந்தையை ‘’மருவத்தூரில் அற்புதம் புத்தகத்திற்கு” முன்னுரை எழுதி தர அன்னை கட்டளையிட்டான். இந்த நிலையில் நான் எப்படி எழுதுவேன் என கூறினார். அன்னை உங்களை எழுத வைப்பான் என பேராசிரியர் அ.சா.ஞா. கூறினார். அவரும் அந்த முன்னுரை எழுதித் தந்தார். ‘சிறப்பாக அமைந்த உரையை அன்னை தான் அவ்வாறு அமைத்துத் தந்தாள்” என தந்தை கூறினார். ஆடிப்பூர விழாவிற்கு வந்து அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கு கொள்ள வேண்டும் என அன்னை பணித்தான். அவ்வாறே ஆடிப்பூர விழாவிற்குத் தந்தையை அழைத்துச் சென்றோம். சிறிது நேரம் அப்பொழுது அடிகளார் கோவிலுக்கு செல்லும் முன் தந்தையைக் காண வந்தார். அவர்மேல் அன்னை வந்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் மனத்தாலேயே பேசிக் கொண்டனர்.
தந்தையின் கண்களில் நீர் வந்தது. எங்களை அன்னையிடம் ஒப்படைத்து அவனிடம் ஒற்றக் கலக்க அனுமதி கேட்டார் போலும்! அவர் என் ஊர் திரும்பியவுடன் என் மூத்த சகோதரியிடம் ‘’அம்மா என்னை அன்னை அழைக்கின்றாள். நான் விரைவில் அவனிடம் சென்று விடுவேன். உங்களை அவள் துணை இருந்து காப்பாள். எல்லாம் இனி அவள் தான் உங்களுக்கு எனக் கூறினார்.
இதன் பிறகு ‘’ஆயிரம் பிறை பார்த்து விட்டேன். அன்னையின் அருளால் முழுவாழ்வு வாழ்ந்து விட்டேன், அவள் அழைக்கிறாள் அவளிடம் செல்லப் போகின்றேன் எனக் கூறினாராம். ஆவணி மாதம் தேய்பிறை மூன்றாம் நாள், அன்னை அவரை அழைத்துக்கொண்டாள். பேராசிரியர் அ.சா.ஞா. மூலமும் திரு.லோகநாதன் மூலமும் இரண்டு குத்து விளக்கு தந்து அனுப்பி, இவைகளை வீட்டில் என்றும் ஏற்றி வரவேண்டும், என பணித்தான் அன்னை, அதன்படியே அந்த விளக்குகள் என் தந்தை உயிர் பிரிந்த வீட்டில் ஏற்றி வருகின்றோம்.
ஓம் சக்தி
நன்றி: சக்திஒளி
]]>