மேல்மருவத்தூரிலே உள்ள ஆதிபராசக்தி ஆலயம் இன்று உலகப் புகழ் பெற்றது. அவ் அன்னை இன்று அடியார்களுக்கு அனைத்தையும் அருளுகின்றாள். அவனன் அன்பர் ஆகுனர் அடைகின்ற இன்பமோ பலப்பல.

அவ்வன்னையை இலக்கியங்கள் பல பெயாpட்டு வழங்கும். ஆதிபராசக்தியான அவ்வன்மையை மாமலை பிங்கலை, அந்தரி, நீலி என்றெல்லாம் அழைக்கும். அவற்றில் ‘’முக்கண்ணாள்” என்பதும் ஒன்று.

முழுதுடை வடிவினனான அவ் ஆதிபராசக்தியே முதற் கடவுள். அவள் தோன்றும்போதே முக்கண்ணுடன் தோன்றினாள். பிறகு மற்ற தெய்வங்களையும் அவன் தோற்றுவித்தாள். அதனாலேயே சர்வம் சக்திமயம் என்ற வேதவாக்கும் தோன்றியது. இவ்வுலகம் அன்னை ஆதிபராசக்தியின் வடிவமாகவே காட்சி தருகின்றது. அவன் வேதத்திற்கு முதற் பொருளாகவும், உட்பொருளாகவும், முடிவுப் பொருளாகவும் விளங்கி வேதத்தையும் கடந்த சக்தி வாய்ந்தவளாக காட்சியளிக்கிறாள்.

வேதங்களால் குறிக்கப்பட்ட அறுசமயத்திற்கும் தலைவி அவளே.

முக்கண்ணோடு தோன்றிய அம்முழுமுதற் தாயைப்பற்றி புராணங்களும் இலக்கியங்களும் பலபடியாய்ப் பேசுகின்றன. அவளின் முக்கண் பற்றி ‘’ஒன்றோடு இரண்டு நயனங்களே” என்று குறிப்பிட்டுக்காட்டும் அபிராமி அந்தாதி. ‘’முக்கண்ணிரைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே” என்றும் சுட்டிக்காட்டும்.

இப்படி முக்கண்ணுடைய தாயை ”லலீதே” என்ற பெயரால் புராணங்கள் வழங்கும். அம் முக்கண்கள் யாது என்றும் சிவ இலக்கியங்கள் பேசும். அவளுக்கு இயல்பாய் அமைந்த இரண்டு கண்களோடு நெற்றியிலும் ஒரு கண்ணை உடையவள்.

அவளுடைய நெற்றிக் கண்ணை பற்றி ‘’வாள் துதற் கண்ணி” என்று அவனை அபிராமி அந்தாதி வாயார வாழ்த்தி மகிழும்.

அட்டமா சித்திகளும், அச்சித்திகளைத்தரும் தெய்வமுமாகிய ஆதி பராசக்தியின் மற்ற இருகண்களைக் குறிக்க ‘’முண்டகக் கண்ணி” என்ற சொல்லாலே சுட்டிக் காட்டும் இவளுடைய கண்ணின் சிறப்பைப் பாரதியாரும்…

பூதங்கள் ஐந்தில் இருந்தெங்கும் கண்ணிற் புலப்படும் சக்தியைப் போற்றுகின்றோம்

என்று குறிப்பிடுவார்.

அம்முக்கண்ணாளான ஆதிபராசக்தியின் அடிகளைச் சரண் அடைந்தார்க்கு கிடைக்காத நன்மைகளே இல்லை யெனலாம். ‘’சீறடிக்கே சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே” என்பதும் அபிராமிப் பட்டரின் வாக்கேயாகும்.

ஆம், உண்மைதான் ஆதிபராசக்தியான அவளின் சீரடிகளைச் சார்ந்தவர்கட்கு அவளின் அருட்கண்பார்வை கிட்டும், அருள் வேண்டி நிற்கும் அன்பர்க்கு அருட் கருணை நல்கும் திருக் கண்ணாள் அவள்.

அவளின் அருள் கிட்ட, வேறு யார்க்கும் அடிமையாகாமல் அம்பிக்கைக்கே அடிமையாக வேண்டும். அவனின் தாமரை போன்ற சீரடிக்கு பரிபூரணமாய் அன்பர்த ஆருவோர் அடைகின்ற நன்மைகள் அளவிடற்கரியது. இதனைக் குமரகுருபரர்.

‘‘புராயிருள் கிழிதா எழுதரு பகுதி வளைத்த கடற் புவியிற் பொதுவற அடிமை செய்திடுவழி அடியார் பொருட்டு அவர் வட்டவணையிற்” என்று குறிப்பிட்டுக் கூறுவார்.

அவளுக்கு அடிமை ஆருவோர் ஒரு நாளும் தளர்ச்சி அடையாத உள்ள உறுதியையும் உடல் உறுதியையும் அடைவர். தம் மனதில் வஞ்சமில்லாத நிலையைப் பெறுவர். அவளின் கடைக்கண் பார்வை பெற்றோர் எமபயம் நீங்கப் பெறுவர் இதனை….

அந்தகன் பால் மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு – என்று குமரகுருபரர் கூறுவார்.

அச்சக்தியின் திருவருளை நாடியவர்கள் செல்வத்தையும் கல்வியையும் தானே பெறுவர். அடியார்க்கு அவற்றை அளிக்கின்ற வாய்ப்பு அவளின் அருட்கண்களிலேயே அமைந்து கிடக்கின்றது.

மற்ற செல்வங்கட்கு அதிபதிகளான, திருமகளையும் மகளையும் அன்னை ஆதிபராசக்தியின் ஒரு கூறாகவே நூல்கள் ஓதும். சில நூல்களோ அன்னையின் கண்களில் இருந்தே திருமகளும் கலைமகளும் தோன்றினார்கள் என்று கூறுகிறது.

அன்னையின் வலக்கண்ணிலே இருந்து திருமகள் தோன்றினாள். அவனின் இடக்கண்ணிலே இருந்து கலைமகள் தோன்றினாள். இதனைக் குமரகுருபரர்

‘’களியளி குயிறு குழல் திருவைத்த வளச் சததன முளரியின் வனிதையை உதவு கடைக்கண் மடப்பிடியே” – என்று கூறுவார்.

இவ்விரு கண்களிலிருந்தும் இவர்கள் தோன்றியதை திருவிளையாடற் புராணத்தில் ‘’திருமகள் வலக்கண் வாக்கின், சேமிழை இடக்கண் ஞானப், பெருமக லுதற்கணாகப் பெற்றுவான் செல்வங் கல்வி, பருமை வீடளிப்பாள் யாவனவன் (19-2) என்று பரஞ்சோதி முனிவர் சுட்டிக் காட்டுவார்.

ஆகவே அன்னையின் அருட்கண் பார்வை கிடைக்கின், ஞானம் தழைக்கும், செல்வம் சிறக்கும், கல்வி பெருகும்.

அம் முக்கண்ணியைத் தொழுவார்க்கு முழுமையான நலன்கள் உண்டாகும். அவனைத் தொழுவதால் உண்டாகும் நன்மைகளை அபிராமி அந்தாதி

தனம் தரும்; கல்வி தரும்; ஒரு நாளும் தளர் வறியா மனம் தரும்; தெய்வ வடிவம் தரும்; நெஞ்சில் வஞ்ச மில்லா இனம் தரும்; நல்லன வெல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே கனம் தரும்; பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

(69) என்று கூறுவர்.

செல்வம், கல்வி, தளர்ச்சியில்லா மனம், வஞ்சமில்லா நட்பு போன்ற அனைத்தையும் தருகின்ற அவளின் அருட்கண் பேற்றினை விரும்பி அவள் பாதங்களைப் பணிவோம். முக்கண்ணுடைய அம்முழுமுதற் தாய் அன்றோ இவ்வுலகம் பதினான்கையும் ஈன்றவள்? இதனை

‘’கருத்தறிய கடலாடை யுலகுபவ வண்டங் கருப்பயில் பெற்ற கன்னி” என்று உலகம் பெற்ற செய்தியாய் சிவப்பிரகாசர் குறிப்பிடுவார்.

அவள் ஈன்றதோடு மட்டுமா? இவ்வுலக உயிர்களிடையே பாசம் கொண்டு அவற்றை அருட்கண்களோடு காப்பாற்றுபவளும் அவளன்றோ?

அவளின் திருப்பாதங்களில் நம்மை நாம் ஒப்படைப்பதன்றி இனி செய்யத் தக்கது யாது உளது? அதனால் அத்தனைக்கும் மொத்தமாய் குடி கொண்டிருக்கும் மேல் மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் கோயிலை அடைந்து அவள் பாதங்களில் நம்மை அடைக்கலமாய் ஒப்புவித்து அவள் அன்பை முழுமையாய்ப் பெறுவோம்.

ஓம் சக்தி நன்றி: சக்திஒளி

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here